News August 8, 2024
அதிகம் விற்பனையான டாப் 5 கார்கள்

ஜூலை மாதம் அதிக விற்பனையான டாப் 5 கார்கள் குறித்த புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. இதில் ஹியூன்டாய் கிரெட்டா முதலிடத்தில் உள்ளது. இக்கார் 17,350 விற்பனையாகி உள்ளன. 2வது இடத்தில் டாடாவின் பன்ச் கார் (16,121), 3ஆவது இடத்தில் மாருதி சூசுகியின் பிரெஸ்ஸா கார் (14,676) உள்ளது. 4ஆவது இடத்தில் டாடாவின் நெக்ஸான் கார் (13,902), 5ஆவது இடத்தில் மஹிந்திராவின் ஸ்கார்பியோ கார் (12,237) உள்ளது.
Similar News
News December 8, 2025
சித்தோடு அருகே வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

சித்தோடு செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் இரண்டு இளைஞர்கள் கத்தியை காட்டி ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். தகவல் அறிந்து சென்ற சித்தோடு போலீசார் 2 வாலிபர்களையும் கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தியதில், கருங்கல்பாளையத்தை சேர்ந்த காஜாமொய்தீன் (33) மற்றும் ஹரிபிரசாத் (28) என்பது தெரியவந்தது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
News December 8, 2025
Sports Roundup: F1 உலக சாம்பியன் ஆனார் நோரிஸ்

*அகமதாபாத்தில் நடந்த பெண்களுக்கான டி20 டிராபி காலிறுதியில் கர்நாடகாவிடம் தமிழகம் தோற்றது. *மேஜர் லீக் கால்பந்து 30-வது சீசனில், இண்டர் மயாமி முதல்முறையாக கோப்பையை வென்றது. *F1 கார்பந்தயத்தின் சிறந்த டிரைவருக்கான உலக சாம்பியன் பட்டத்தை இங்கிலாந்தின் லாண்டோ நோரிஸ் கைப்பற்றினார். *கர்நாடகா கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் EX இந்திய பவுலர் வெங்கடேஷ் பிரசாத் வெற்றி.
News December 8, 2025
சிவன், விநாயகருக்கு உரிய நாள்: இன்று இப்படி வழிபட்டால்..

இன்று சிவனுக்கு உரிய திங்கள்கிழமையும், விநாயகருக்கு உரிய சதுர்த்தியும் ஒரே நாளில் வருவது அபூர்வமான ‘சோம சங்கடஹர சதுர்த்தி’ ஆகும்.. இன்று மாலை 6 மணிக்கு மேல் விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபடுங்கள். சந்திர தரிசனம் செய்து, ‘ஓம் விக்ன ராஜாய நமஹ’ என்ற ஸ்லோகத்தை 108 முறை உச்சரியுங்கள். வாழ்வில் தீராத சங்கடங்கள், தடைகள் அனைத்தும் நீங்கும். முழு நம்பிக்கையுடன் செய்யுங்கள், நல்லதே நடக்கும்!


