News December 31, 2024

டாப் 2: ஸ்டாலின் மீது 47 கிரிமினல் வழக்குகள்

image

அதிக கிரிமினல் வழக்குகள் உள்ள முதல்வர்களின் பட்டியிலில், 47 வழக்குகளுடன் ஸ்டாலின் 2ஆவது இடத்தில் உள்ளதாக ADR& NEW நடத்திய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. தேர்தல் பிரமாண வாக்கு மூலத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படையில், நாட்டின் பணக்கார CMஆக சந்திரபாபு நாயுடு (₹931 கோடி), ஏழை CMஆக மம்தா பானர்ஜி (₹15 லட்சம்) உள்ளனர். அதிக கிரிமினல் வழக்குகளுடன் ரேவந்த் ரெட்டி (89) முதலிடத்தில் உள்ளார்.

Similar News

News March 12, 2026

அடுத்து இந்த பொருளுக்குதான் தட்டுப்பாடு வரப்போகுது!

image

ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால், விரைவில் உர விநியோகத்திலும் தட்டுப்பாடு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இந்தியாவின் உர தேவையில் 20- 25% ஹார்முஸ் கடல் பாதை வழியாகதான் இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக, நைட்ரஜன் உரங்களில் 63%, பொட்டாஷ் உரங்களில் 42% மத்திய கிழக்கு நாடுகளில் இருந்துதான் வருகிறதாம். இருப்பினும், தற்போது போதுமான அளவு உரக் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News March 12, 2026

தமிழக தேர்தல் தேதி எப்போது?.. வெளியான அப்டேட்

image

தமிழக தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், வருகிற ஞாயிற்றுக் கிழமையன்று 5 மாநில தேர்தல் தேதிகளை ECI அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருப்பதாகவும், ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு நாளாக இருக்கும் எனவும் ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. வாக்காளர்களே ரெடியா!

News March 12, 2026

திருமணங்களில் தடபுடலான விருந்து கட்

image

வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டின் தாக்கம் திருமணம், சுப காரியம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் எதிரொலித்துள்ளது. இந்த மாதத்தில் 4 சுபமுகூர்த்த நாட்கள் உள்ள நிலையில், திருமண நிகழ்வுகளுக்கு தேவையான சிலிண்டர்களை டீலர்களிடம் இருந்து பெறமுடியாமல் கேட்டரிங் & திருமண மண்டப உரிமையாளர்கள் தவிக்கின்றனர். இதனால், விருந்து மெனுவில் உணவுகளின் எண்ணிக்கையை குறைக்க உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!