News August 14, 2024

உலகின் TOP 10 உளவு அமைப்புகள்

image

ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு ராணுவம் எவ்வளவு முக்கியமோ அதுபோல சக்திவாய்ந்த உளவு அமைப்புகளும் அவசியமாகும். இதுபோன்ற சக்திவாய்ந்த உலகின் டாப் 10 உளவு அமைப்புகளின் பெயர்களைத் தெரிந்து கொள்வோம். *இஸ்ரேல் – மொசாட் *அமெரிக்கா – C.I.A.*பிரிட்டன் -MI-6 *இந்தியா – R.A.W. *பாகிஸ்தான் – I.S.I. *சீனா -MSS *ரஷ்யா – FIS *பிரான்ஸ் – DGSE *ஆஸ்திரேலியா -ASIS *ஜெர்மனி – BND ஆகியவை ஆகும்.

Similar News

News January 9, 2026

நகைக் கடன்.. வந்தாச்சு புதிய அப்டேட்

image

2026 ஜனவரி முதல், நகைக் கடன் வழங்குவதில் RBI-ன் புதிய வழிகாட்டுதல்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. நகையை அடகு வைக்கும்போது, கடந்த 30 நாள்களின் சராசரி விலை (அ) நேற்றைய இறுதி விலை இந்த இரண்டில் எது குறைவோ அதன் அடிப்படையில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும். இந்த கணக்கீடு காரணமாக, வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் கடன் வரம்பில் சிறிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. SHARE IT.

News January 9, 2026

இனியன் சம்பத் காலமானார்

image

‘சொல்லின் செல்வர்’ ஈவிகே சம்பத்தின் மகனும், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான இனியன் சம்பத் காலமானார். திமுக, காங்., அதிமுக ஆகிய கட்சிகளில் இருந்த இனியன் சம்பத், 2016-ல் ‘அம்மா திமுக’ என்ற புதிய கட்சியை தொடங்கினார். சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News January 9, 2026

மக்களின் வாழ்க்கையை சீரழித்து வரும் பாஜக: ராகுல்

image

நாடு முழுவதும் ‘ஊழல்’ பாஜக கட்சி, மக்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ஊழல், அதிகார துஷ்பிரயோகம், ஆணவம் எனும் விஷம் பாஜக அரசியலில் மேலிருந்து கீழ் வரை பரவியுள்ளதாக விமர்சித்துள்ளார். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் புள்ளி விவரங்களாக மட்டுமே இருப்பதாக கூறிய அவர், மோடிஜியின் ‘டபுள் இன்ஜின் ஆட்சி’ பில்லியனர்களுக்காக மட்டுமே இயங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!