News September 8, 2025

உலகின் ஆபத்தான டாப் 10 சாலைகள்

image

சலிப்பூட்டும் தினசரி வாழ்க்கையில் இருந்து சிறிய பிரேக் எடுத்து உங்களை உற்சாகமூட்டிக் கொள்ள சுற்றுலாவும் தனிப்பட்ட பயணங்களும் உதவும். இதிலும் த்ரில் வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆபத்தான சாலைகளில் பயணம் செய்து கிக் பெறலாம். அதற்கான அழகுடன் ஆபத்துகளையும் ஒளித்து வைத்திருக்கும் டாப் 10 சாலைகளை மேலே போட்டோக்களை வழங்குகிறோம். ஸ்வைப் செய்து கண்டு ரசியுங்கள். SHARE IT

Similar News

News September 10, 2025

திமுகவுக்கு தோல்வி பயம்: தவெக அருண்ராஜ்

image

விஜய்யின் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி தர மறுப்பது திமுகவின் பயத்தை காட்டுவதாக தவெக கொள்கை பரப்புப் பொ.செ அருண்ராஜ் தெரிவித்துள்ளார். மக்களிடையே தவெகவிற்கு பெருகி வரும் செல்வாக்கை பார்த்து திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாகவும், அதனால் விஜய்க்கு நெருக்கடி கொடுக்க முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். திமுக அரசு கொடுக்கும் நெருக்கடி தவெகவுக்கு சாதகமாக முடியும் என்று அருண்ராஜ் கூறினார்.

News September 10, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 454 ▶குறள்: மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துள தாகும் அறிவு. ▶பொருள்: அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.

News September 10, 2025

விஜய்யுடன் மோத தயாராகும் சூர்யா

image

சூர்யாவின் ‘கருப்பு’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓடிடி உரிமை இன்னும் விற்கப்படாததால் தீபாவளி ரேஸில் இருந்து ‘கருப்பு’ படம் விலகியது. இதையடுத்து படக்குழு பொங்கல் ரிலீஸை குறி வைத்துள்ளது. விஜய்யின் ‘ஜனநாயகன்’ 9-ம் தேதி ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதே நாள் அல்லது 14-ம் தேதி ‘கருப்பு’ வெளியாகும் என்று கூறப்படுகிறது. எந்த படத்தை முதலில் பார்ப்பீங்க?

error: Content is protected !!