News December 31, 2024

2024ல் அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள்

image

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் எதிர்பார்த்த உச்ச நட்சத்திரங்களில் படங்கள் பின்னடைவை சந்தித்த நிலையில், சிறு பட்ஜெட் படங்கள் முத்திரை பதித்தன. கோட், அமரன், வேட்டையன், மகாராஜா, ராயன், இந்தியன் 2, கங்குவா, அரண்மனை 4, அயலான், கேப்டன் மில்லர், தங்கலான் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் வசூலை குவித்துள்ளன. இதில் இந்தியன் 2, கங்குவா படங்கள் நஷ்டத்தை தழுவிய போதிலும், பாக்ஸ் ஆஃபீஸ் அடிப்படையில் இடம்பெற்றுள்ளன.

Similar News

News April 11, 2026

என்ன செய்கிறார் மாநிலத் தலைவர் நயினார்?

image

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் வரை, கமலாலயம், டெல்லி தலைமை அலுவலகம், பேட்டிகள் என விறுவிறுப்பாக இயங்கிவந்தார் நயினார். ஆனால், பட்டியல் வெளியான பிறகு, போட்டியிடும் சாத்தூர் தொகுதியிலேயே வாக்கு சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, நெல்லை, குமரியில் கட்சி கூட்டங்களில் மட்டும் பங்கேற்றுள்ளார். ஒரு மாநிலத் தலைவரின் இந்த சைலண்ட் பயணம், அரசியல் கவனம் பெற்றுள்ளது.

News April 11, 2026

திமுகவில் இருந்து அடுத்த விலகல்.. ஸ்டாலின் அதிர்ச்சி!

image

மனோஜ் பாண்டியன் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகேஷ்மாயவன் விலகியுள்ளார். ஆலங்குளம் பிரசார களத்தில் அதிமுக நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும், திமுக நிர்வாகிகள் மனோஜ் பாண்டியன் மதிப்பதில்லை என்பதால் சுயமரியாதையின்றி இங்குப் பயணிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே <<19563851>>வேலூர்<<>>, கோவையிலும் திமுக முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகினர்.

News April 11, 2026

₹56,100 சம்பளம், 243 பணியிடங்கள்.. Apply Now

image

தேசிய தகவலியல் மையத்தில் 243 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கணினி அறிவியல் & தகவல் தொழில்நுட்பம், தரவு அறிவியல் & செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பணிகளுக்கு B.E/ B.Tech கல்வித்தகுதியுடன், GATE மதிப்பெண் அவசியமாகும். 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த <>லிங்க்கில்<<>> ஏப்.24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். சம்பளமாக ₹56,100 முதல் ₹1,77,500 வரை வழங்கப்படும். SHARE.

error: Content is protected !!