News June 27, 2024

நாளை கடைசி: விமானப்படையில் வேலை

image

இந்திய விமானப்படையில் பிளையிங், கிரவுண்ட் டியூட்டி ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 304 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூன் 28) கடைசி நாளாகும். இதற்கு பி.இ., பி.டெக் படித்த 20 – 24 மற்றும் 20 – 26 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு, உடற்தகுதி, நேர்காணல் ஆகிய முறைகளில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு <>https://afcat.cdac.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News September 19, 2025

பிரபாஸ் VS தீபிகா ரசிகர்கள் இடையே வார்த்தை போர்

image

<<17750330>>‘கல்கி 2’ <<>>படத்தில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தீபிகா, பிரபாஸ் ரசிகர்களுக்கு இடையே சோஷியல் மீடியாவில் போர் வெடித்துள்ளது. ஷூட்டிங் நேரத்தை குறைக்க சொல்லி, கமிட்மெண்ட் இல்லாமல் இருந்தது தான் தீபிகா வெளியேற்றத்திற்கு காரணம் என பிரபாஸ் ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனால், கர்ப்பிணியாக இருந்த போது ‘கல்கி 1’-ல் நடித்த தீபிகாவின் கமிட்மெண்ட் பற்றி பேச தகுதியில்லை என அவரது ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

News September 19, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶செப்டம்பர் 19, புரட்டாசி 3 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: சதுர்தசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை.

News September 19, 2025

பாலியல் வழக்கில் சமிர் மோடி கைது

image

முன்னாள் ஐபிஎல் சேர்மன் லலித் மோடியின் தம்பி சமிர் மோடி டெல்லி ஏர்போர்ட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். வேலைவாய்ப்பு தருவதாக கூறி பெண் ஒருவருக்கு சமிர் மோடி, தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டலும் விடுத்துள்ளார். அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சமீர் மோடி மீது 2 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் பணம் பறிப்பதற்காகவே புகாரளிக்கப்பட்டுள்ளதாக சமிர் மோடி தரப்பு கூறுகிறது.

error: Content is protected !!