News September 5, 2024
நாளை கடைசி: மத்திய அரசில் வேலை

மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் COAL MINES PROVIDENT FUND நிறுவனத்தில் காலியாகவுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளை (செப்.6) கடைசி நாளாகும். ஜூனியர் ஹிந்தி மொழி பெயர்ப்பாளர் (10 இடங்கள்), சோஷியல் செக்யூரிட்டி உதவியாளர் (126) பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இதற்கு CMPFO ஆள்சேர்ப்பு இணையதளத்தின் https://cmpfo.gov.in/இல் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News July 11, 2025
மாலை 5 மணிக்கு.. சபரிமலை பக்தர்களின் கவனத்திற்கு

தேவபிரசன்னத்தில் கூறப்பட்டதன் அடிப்படையில் சபரிமலையின் மாளிகப்புரத்தம்மன் கோயிலில் நவக்கிரக கோயில் கட்டப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அதன் பிரதிஷ்டைக்காக, இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. ஞாயிறு காலை 11 மணிக்கு நவக்கிரக பிரதிஷ்டை நடத்தப்பட்டு, இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆடி மாத பூஜைக்காக கோவில் நடை மீண்டும் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை திறக்கப்படும்.
News July 11, 2025
பங்குச்சந்தைகள் சரிவால் முதலீட்டாளர்கள் கலக்கம்!

இந்தியப் பங்குச்சந்தைகள் 2-வது நாளாக இன்றும்(ஜூலை 11) சரிவைக் கண்டுள்ளன. வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 249 புள்ளிகள் சரிந்து 82,941 புள்ளிகளிலும், நிஃப்டி 67 புள்ளிகள் சரிந்து 25,288 புள்ளிகளிலும் வர்த்தகமாகிறது. குறிப்பாக TCS, Infosys, Tech Mahindra உள்ளிட்ட முக்கிய ஐடி நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைக் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
News July 11, 2025
வைகோ அல்ல ‘பொய்கோ’: வைகைச்செல்வன் விளாசல்

திருச்சி திமுக மாநாட்டிற்குச் செல்லாமல், போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்ததே அரசியல் வாழ்க்கையில் தான் செய்த மிகப்பெரிய தவறு என <<17024276>>வைகோ<<>> பேசியிருந்தார். இந்நிலையில், மதிமுகவின் பம்பரம் சின்னத்திற்கான அங்கீகாரத்தை பெற்றுத்தர உழைத்தது அதிமுக என்பதை அவர் மறந்திடக்கூடாது என வைகைச்செல்வன் கூறியுள்ளார். அவர் வைகோ அல்ல, ‘பொய்கோ’ என்றே அழைக்க வேண்டும் என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.