News November 23, 2024
நாளை கடைசி: வங்கியில் 600 பணியிடங்கள்

பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் காலியாக உள்ள 600 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (நவ.24) கடைசி தேதியாகும். Apprentices பணிகளில் சேர தகுதி உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: Any UG Degree. வயது வரம்பு: 20-28. சம்பளம்: ₹9,000. தேர்வு முறை: ஆன்லைன் & நேர்முகத் தேர்வு. கூடுதல் விவரங்களுக்கு இந்த <
Similar News
News September 17, 2025
BREAKING: மகாளய அமாவாசை, விடுமுறை.. ஸ்பெஷல் அறிவிப்பு

மகாளய அமாவாசை, வார விடுமுறையையொட்டி, பொதுமக்கள் ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை அறிவித்துள்ளது. அதன்படி, செப்.19, 20, 21 ஆகிய தேதிகளில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மொத்தமாக 1055 கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tnstc.in இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். SHARE IT.
News September 17, 2025
அஜித் படத்தை ரீமேக் செய்ய ஆசை: கவின்

கவின், ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் ‘கிஸ்’ படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் விஜய், அஜித் நடித்த காதல் படங்களில் தனக்கு பிடித்ததை பகிர்ந்துள்ளார். குஷி, சச்சின், காதலுக்கு மரியாதை, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், முகவரி ஆகிய படங்கள் தனக்கு பிடிக்கும் என கூறியுள்ளார். அதேநேரம், ‘வாலி’ படத்தை ரீமேக் செய்ய ஆசை என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
News September 17, 2025
புதிய பகைவரையும் வெல்வோம்: கனிமொழி

அப்பா கருணாநிதி பெற்ற பெரியார் விருதை தான் பெற வேண்டும் என்ற கனவை நனவாக்கியுள்ளார் அண்ணன் ஸ்டாலின் என்று கனிமொழி நெகிழ்ச்சிபட கூறியுள்ளார். திமுக முப்பெரும் விழாவில் பேசிய அவர், நம் பரம்பரை பகைவரோ, பாரம்பரிய பகைவரோ, புதிய பகைவரோ என விஜய்யையும் மறைமுகமாக குறிப்பிட்டு, அத்தனை பேரையும் வென்று காட்டுவோம் என்றும் சூளுரைத்துள்ளார்.