News November 11, 2024
நாளை கடைசி: மத்திய அரசில் 802 பணியிடங்கள்

POWERGRID நிறுவனத்தில் காலியாகவுள்ள 802 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (நவ.12) கடைசி நாளாகும். Jr Officer Trainee, Diploma Trainee உள்ளிட்ட பொறுப்புகளில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: Diploma, BA, BE, BBA, BBM, CA. வயது: 18-27. சம்பளம்: ₹21,500 – ₹1,08,000. தேர்வு முறை: எழுத்துத் தேர்வு. விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் விவரங்களுக்கு <
Similar News
News August 24, 2025
இது Expiry date இல்லை.. இந்த நம்பரின் அர்த்தம்

சிலிண்டரின் உறுதியை 10 ஆண்டுகளுக்கு பிறகு கண்டிப்பாக பரிசோதிக்க வேண்டும். அதனை எப்போது செய்ய வேண்டும் என்ற குறியீடே Test date(சோதனை தேதி) ஆகும். இதில் (A25, B26, C27) எழுத்துக்கள் மாதத்தை குறிக்கின்றன. A (ஜனவரி- மார்ச்), B (ஏப்ரல்- ஜூன்), C(ஜூலை- செப்டம்பர்), D(அக்டோபர்- டிசம்பர்). எண்கள் வருடத்தை குறிக்கின்றன. 25, 26, 27 என்பது 2025, 2026, 2027 என்ற வருடத்தை குறிக்கிறது.
News August 24, 2025
நகை கடன்.. முக்கிய அறிவிப்பு

நகை மதிப்பில் 90% வரை கடன் வழங்கும் திட்டத்தை சவுத் இந்தியன் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த வட்டி விகிதம், நெகிழ்வான திருப்பி செலுத்தும் விருப்பத் தேர்வுகளுடன் கடன் வழங்கப்படும் என வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்மூலம், ₹1 லட்சம் மதிப்புள்ள நகைகளுக்கு ₹90 ஆயிரம் வரை கடன் பெற முடியும். பொதுத்துறை வங்கிகள் 60 – 70% வரையும், நிதி நிறுவனங்கள் 75% வரையும் நகை கடன் வழங்குகின்றன. SHARE IT
News August 24, 2025
சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு?

தமிழக டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால், ஆக.29 உடன் ஓய்வு பெறுவதற்கான கோப்பில் CM ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், புதிதாக அமைக்கப்படவுள்ள தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக 2 ஆண்டுகளுக்கு அவரை நியமிக்கவுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அடுத்த டிஜிபி பரிந்துரையில் சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் உள்ளனராம்.