News December 31, 2024
நாளை (ஜன. 1) முதல் வரும் முக்கிய மாற்றங்கள்

* சமையல் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம்
* UPI 123 pay மூலம் இனி ₹10,000 வரை பரிமாற்றம் செய்யலாம்.
* விவசாயிகள் இனி ₹2 லட்சம் வரை unsecured லோன் பெற்றுக் கொள்ளலாம்
* NSE பங்குச்சந்தை தனது expiry தேதிகளில் மாற்றம் செய்துள்ளது
* PF பணத்தை ஏடிஎம் மையங்களில் எடுக்கும் வசதி 2025 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
* வருமான வரியில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன.
Similar News
News July 11, 2025
வைகோ நன்றி மறக்கக்கூடாது: ஜெயக்குமார்

வைகோ நன்றி மறக்கக்கூடாது என்று D ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுகவுடன் கூட்டணி வைத்தது தவறு என வைகோ பேசியதற்கு அதிமுகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அதிமுக கூட்டணிக்கு அவர் வந்தபோது 5 சீட் கொடுக்கப்பட்டு 3 எம்பிக்கள் நாடாளுமன்றம் சென்றதாக குறிப்பிட்டார். எனவே, மறைந்த ஒரு தலைவரை இழிவுபடுத்த வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.
News July 11, 2025
மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

கீழடி அகழாய்வில் குறிப்பிடத்தக்க வகையில் எதுவும் கிடைக்கவில்லை என கூறிய PS ஸ்ரீராமனின் கருத்துகள் கண்டனத்திற்கு உள்ளானது. இதனிடையே, இவரிடம் 3-ம் கட்ட அகழாய்வு குறித்து அறிக்கை அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், இதன் மூலம் மத்திய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். எனவே தனது நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
News July 11, 2025
7.2 லட்சம் பேர்களுக்கு வீடு தேடி ரேசன் பொருள்கள் விநியோகம்

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளின் வீடு தேடி சென்று ரேசன் பொருள்கள் வழங்கும் திட்டம் புதிதாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஜூலையில் மட்டும் இதுவரை 7.2 லட்சம் பேரின் வீடுகளுக்கு வாகனங்களில் நேரில் சென்று ரேசன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. வாகனங்களில் ஊழியர்கள் நேரில் சென்றபோது, 2.25 லட்சம் ரேசன் அட்டைதாரர்களின் வீடுகள் பூட்டப்பட்டு இருந்தன. இதனால் அவர்களுக்கு மட்டும் வழங்கப்படவில்லை.