News April 10, 2025

நாளை தவெக மா.செ.க்கள் கூட்டம்

image

சென்னையில் நாளை தமிழக வெற்றிக் கழகம்(TVK) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் பகல் 12 மணிக்கு இக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பூத் கமிட்டி மாநாடு குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பது கவனிக்கத்தக்கது.

Similar News

News April 18, 2025

ஒரு கிராம் ₹9,000-ஐ நெருங்கிய தங்கம்!

image

தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இன்று (ஏப்.18) கிராமுக்கு₹25 உயர்ந்ததால் 1 கிராம் ₹8,945-க்கும், சவரன் ₹71,560-க்கும் விற்பனையாகிறது. கடந்த 1-ம் தேதி ஒரு கிராம் ₹8,510-க்கு விற்பனையான நிலையில், 18 நாள்களில் கிராமுக்கு ₹435 அதிகரித்துள்ளது. இது வரும் நாள்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

News April 18, 2025

ஆன்மிக சுற்றுலாவுக்கு ₹1 லட்சம் மானியம்!

image

இமயமலை மானசரோவர் யாத்திரை செல்லும் 500 பக்தர்களுக்கு அரசு வழங்கும் மானியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை வழங்கப்பட்டு வந்த ₹50,000 மானியம் இனி ₹1 லட்சமாக உயர்த்தப்படும் என பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். அதே போல், நேபாளம், முக்திநாத் ஆன்மிக பயணத்திற்கான அரசு மானியம் ₹20,000–த்தில் இருந்து ₹30,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

News April 18, 2025

தங்கம் விலை சவரனுக்கு ₹200 உயர்ந்து ₹71,560-க்கு விற்பனை!

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப்.18) சவரனுக்கு ₹200 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் ஒரு கிராம் ₹8,945-க்கும், சவரன் ₹71,560-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ₹110-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,10,000-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் நகைப் பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க..

error: Content is protected !!