News March 16, 2024
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளையே கடைசி நாள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்திலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இந்த நிலையில், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டியவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News October 23, 2025
2026-ல் திமுக கூட்டணிக்கே வெற்றி: வைகோ

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிதான் மகத்தான வெற்றிபெறும் என்று வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதிதாக வந்தவர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற வாதத்தை ஏற்க முடியாது. முதலில் அவர்கள் களத்தில் இறங்கி மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும். மறுபுறம் அதிமுக- பாஜக கூட்டணி மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, 2026-ல் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்றார்.
News October 23, 2025
இனி விமானங்களில் இதை எடுத்து செல்ல முடியாதா?

விமானங்களில் பவர் பேங்க் கொண்டு செல்வதை தடை செய்ய (அ) கட்டுப்பாடுகளை விதிக்க சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஆலோசித்து வருகிறது. கடந்த 19-ம் தேதி இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் கொண்டு சென்ற பவர் பேங்க் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பவர் பேங் கொண்டு செல்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் DGCA விளக்கமும் அளித்துள்ளது.
News October 23, 2025
போன் யூஸ் பண்றீங்களா? உடனே இத படிங்க.. WARNING!

பொழுதுபோக்கு முதல் பொருள்கள் வாங்குவது வரை போன் தேவையாக உள்ளது. ஆனால், நீண்டநேரம் போன், கணினி பயன்படுத்துவதால் ‘TEXT NECK SYNDROME’ என்ற பாதிப்பு அதிகரித்து உள்ளதாகவும், குழந்தைகள், இளைஞர்களை அதிகம் பாதிப்பதாகவும் டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் கழுத்து எலும்புகளுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு, தசைகளும் பாதிக்கப்படுகிறது. மேலும் தலைவலி, தோள்பட்டை- கழுத்துவலி, நரம்பு பாதிப்பும் ஏற்படும்.