News January 1, 2025
SSLC மாணவர்கள் திருத்தம் செய்ய நாளை கடைசி நாள்

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் தேர்வெண்ணுடன் கூடிய பட்டியலில் திருத்தம் செய்ய நாளை கடைசி நாளாகும். நடப்பு கல்வியாண்டில் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பட்டியல் கடந்த 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், விடுபட்ட மாணவர்கள் சேர்ப்பு, இறப்பு, TC வாங்கிய மாணவர்கள் நீக்கம் ஆகிய பணிகள் தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 19, 2025
முகம் பொலிவா மாறணுமா? இத பண்ணுங்க!

நீர்ச்சத்து குறைபாட்டை நீக்கி முகத்தை பொலிவாக்க வெண்ணய் உதவும் என்கின்றனர் நிபுணர்கள். அதன்படி: *நன்கு பழுத்த வாழைப்பழத்துடன் சிறிது வெண்ணெய் சேர்த்து நன்கு அரைத்து முகத்தில் பூசி 30 நிமிடம் ஊறவைத்து கழுவலாம் *வெண்ணெய்யுடன், ரோஸ் வாட்டரை கலந்து முகத்தில் தடவி வரலாம் *வெண்ணெய், வெள்ளரிக்காய் பேஸ்ட்டை முகத்தில் தடவினால் முகம் பொலிவாகும் *வெண்ணெய்யை, தேனுடன் கலந்தும் முகத்தில் பூசலாம்.
News December 19, 2025
ரோடு ஷோ.. ஐகோர்ட் புதிய உத்தரவு

ரோடு ஷோவுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக்கோரிய வழக்கில், ஜன.5-க்குள் TN அரசு அரசாணை வெளியிட வேண்டும் என மெட்ராஸ் HC உத்தரவிட்டுள்ளது. கரூர் சம்பவத்தை தொடர்ந்து, ரோடு ஷோவுக்கு தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்த வழக்கில், அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளை பரிசீலித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என கோர்ட் தெரிவித்துள்ளது. ஆட்சேபம் இருந்தால், எதிர்த்து வழக்கு தொடரலாம் எனவும் கோர்ட் கூறியுள்ளது.
News December 19, 2025
விலை ₹3,000 குறைந்தது.. பொங்கல் பண்டிகை மகிழ்ச்சி

கடந்த சில தினங்களாக புதிய உச்சத்தை தொட்டு வரும் வெள்ளியின் விலை ஒரே நாளில் கிலோவுக்கு ₹3,000 குறைந்துள்ளது. சில்லறை விலையில் 1 கிராம் ₹221-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,21,.000-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை குறைந்துள்ளதால் பொங்கல் பண்டிகைக்கு சீர் பொருள்கள் வாங்குவோர் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் வெள்ளி விலை குறைந்து வருவதால் வரும் நாள்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளது.


