News September 20, 2025
நாளை மகாளய அமாவாசை: மறந்தும் இத செய்யாதீங்க!

நாளை மகாளய அமாவாசை தினம் வருகிறது. இந்நாளில் முன்னோர்கள் வழிபாடு, பித்ருக்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். இந்த நாளில் செய்யக்கூடாத சில விஷயங்கள் உள்ளது *வாசலில் கோலம் போடக்கூடாது *மது, புகை பழக்கம் கூடாது *வீட்டில் அசைவம் சமைக்கக்கூடாது *முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க எள்ளை கடன் வாங்கக்கூடாது *பூஜை அறையில் விளக்கேற்றக்கூடாது. இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு பகிரவும்.
Similar News
News September 20, 2025
பழவேற்காடு சரணாலயத்தில் மதுக்கடை: அன்புமணி சாடல்

மது வணிகத்தை மட்டுமே முதன்மை நோக்கமாக கொண்டு திமுக அரசு செயல்படுவதாக அன்புமணி விமர்சித்துள்ளார். பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில் டாஸ்மாக் நிறுவனம் விதிகளை மீறி மதுக்கடை நடத்தி வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். சுற்றுச்சூழலை அழிக்கும் தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றும் பறவைகள் சரணாலயத்தில், மதுக்கடைகளை அனுமதிப்பது சட்டவிரோதம் எனவும் அன்புமணி சாடியுள்ளார்.
News September 20, 2025
துயரத்திலும் கடமை தவறாத துனித் வெல்லாலகே

சமீபத்தில் தந்தையை இழந்த துனித் வெல்லாலகே, இலங்கை அணிக்காக செய்த செயல் பாராட்டுகளை பெற்றுள்ளது. தந்தையின் இறுதிச் சடங்குகளை முடித்த கையோடு அவர், சூப்பர் 4 சுற்றில் விளையாடுவதற்கு துபாய் திரும்பியுள்ளார். சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணி இன்று வங்கதேச அணியை எதிர்கொள்ளும் நிலையில், துனித் வெல்லாலகே போட்டிக்கு தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
News September 20, 2025
இந்தியாவில் பலவீனமான PM உள்ளார்: ராகுல் காந்தி

நான் மீண்டும் சொல்கிறேன், இந்தியாவில் பலவீனமான PM உள்ளார் என்று ராகுல் காந்தி X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். USA-வின் H-1B விசாவை பெறுவதற்கான கட்டணம் ₹90 லட்சம் என்று கடுமையாக உயர்த்தி அறிவிக்கப்பட்ட நிலையில், ராகுல் இவ்வாறு விமர்சித்துள்ளார். அதேபோல், நாட்டை பாதுகாப்பதில் தான் வெளியுறவு கொள்கை இருக்க வேண்டும் என்று கார்கேயும் சுட்டிக்காட்டியுள்ளார்.