News August 14, 2024

நாளை சுதந்திர தினம்.. இன்று ராணுவ கேப்டன் வீரமரணம்

image

சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தீவிரவாதிகளால் ராணுவ கேப்டன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. காஷ்மீரில் தோடா மாவட்டத்தில் நேற்று இரவு ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் கேப்டன் தீபக் சிங் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

Similar News

News September 18, 2025

₹12 ஆயிரம் போட்டால் ₹40 லட்சம் கிடைக்கும் மாஸ் திட்டம்!

image

போஸ்ட் ஆபீஸின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் (PPF) மூலம் மாதம் ₹12,500 முதலீடு செய்தால் 15 ஆண்டுகள் கழித்து ₹40.68 லட்சம் உங்களுக்கு கிடைக்கும். அதாவது, ஒவ்வொரு மாதமும் ₹12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்தம் ₹22.5 லட்சம் இருக்கும். அத்துடன், அரசின் 7.1% வட்டி விகிதத்தை சேர்த்தால் ₹40.68 லட்சம் கிடைக்கும். இந்த திட்டத்தில் இணைய போஸ்ட் ஆபீஸுக்கு செல்லுங்கள். SHARE.

News September 18, 2025

256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு: அண்ணாமலை

image

திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியுள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். சட்டசபையில் வெளியிட்ட 256 திட்டங்களை, நிறைவேற்ற சாத்தியமில்லை என்பதால் அவற்றை கைவிட அரசு முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியாகிருப்பதாக தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில், சொல்லாமல் செய்தது, ஊர் ஊராக கருணாநிதியின் சிலை வைத்தது மட்டும்தான் எனவும் விமர்சித்துள்ளார்.

News September 18, 2025

BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

image

தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், தி.மலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!