News August 6, 2024
சேலம், விருதுநகரில் நாளை உள்ளூர் விடுமுறை

சேலத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில், ஆடி மாதம் நடைபெறும் திருவிழா மிகவும் பிரபலம். இதையொட்டி சேலம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஆக.31 வேலைநாள். இதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் நாளை நடைபெறுவதால், விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஆக.17 வேலைநாள்.
Similar News
News December 31, 2025
கோமாவுக்கு சென்ற EX ஆஸி. வீரர்!

ஆஸி. அணி முன்னாள் வீரரான டேமியன் மார்ட்டின் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோமாவுக்கு சென்ற நிலையில் உயிருக்கு போராடி வருகிறார். இதனையடுத்து 54 வயதான டேமியன் மீண்டு வரவேண்டும் என பலரும் தெரிவித்து வருகின்றனர். 1999, 2003-ல் ICC WC வென்ற ஆஸி. அணியில் டேமியன் முக்கிய வீரராக இருந்தார். குறிப்பாக 2003 WC பைனலில் இந்தியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் எடுத்ததை யாராலும் மறக்க முடியாது.
News December 31, 2025
New Year-ல் மகிழ்ச்சி.. விலை ₹1000 குறைந்தது

புத்தாண்டு தினத்தையொட்டி, நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் சரசரவென்று குறைந்துள்ளது. இன்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி விலை ₹1 குறைந்து ₹257-க்கும், கிலோ வெள்ளி ₹1000 குறைந்து ₹2,57,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு நாள்களில் மட்டும் வெள்ளி விலை ₹24,000 சரிந்துள்ளது.
News December 31, 2025
அமித் ஷாவின் தமிழக வருகையில் மாற்றம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜன.4ம் தேதியே தமிழ்நாட்டிற்கு வருகிறார். திருச்சி மற்றும் புதுக்கோட்டைக்கு 2 நாள் பயணமாக வரும் ஜனவரி 9,10-ம் தேதிகளில் வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கு முன்னதாகவே வரும் 4,5-ம் தேதிகளில் அவர் தமிழகத்திற்கு வருகிறார். அப்போது நயினார் நாகேந்திரனின் பிரச்சார இறுதி நிகழ்ச்சி மற்றும் தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவும் உள்ளார்.


