News March 21, 2024
நாளை மாலை 6.30 மணிக்கு

ஐபிஎல் 17ஆவது சீசன் தொடர் நாளை தொடங்க உள்ளது. சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டியில், சென்னை- பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. நாளை மாலை 6.30 மணிக்கு தொடங்கும் தொடக்க விழாவை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் மற்றும் ஜியோ சினிமா App-இல் இலவசமாக காணலாம். ருதுராஜ் (CSK) மற்றும் டு பிளெசிஸ் (RCB) தலைமையிலான அணிகள் மோதவுள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கப்போவது யார்?
Similar News
News April 28, 2025
திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரஸ் திட்டம்?

திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்வபெருந்தகை முன்னிலையில் அண்மையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடந்தது. இதில் பேசிய மாவட்ட தலைவர்கள், திமுகவிடம் 60 தொகுதிகளை கேட்க வேண்டும், துணை முதல்வர் பதவி கேட்க வேண்டும், திமுக தரவில்லையேல் அக்கட்சித் தலைமையிலான கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
News April 28, 2025
10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் ஒருபுறம் வெயில் சுட்டெரிக்க, மறுபுறம் கோடை மழையும் கொட்டி வருகிறது. பிற்பகல் 3 மணி வரை கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதேபோல், காரைக்கால் பகுதியிலும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. உங்க ஏரியாவில் வெயிலா? மழையா?
News April 28, 2025
சென்செக்ஸ் 1,022 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,022 புள்ளிகள் உயர்ந்து 80,234 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 292 புள்ளிகள் உயர்ந்து 24,331 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், சன் பார்மா, நெஸ்லே ஆகியவை நிஃப்டியில் அதிக லாபம் பெற்றுள்ளன.