News March 3, 2025
நாளை மதியம் 2:30 மணிக்கு…

சாம்பியன்ஸ் டிராபியின் மாபெரும் போட்டியாக நாளை நடக்கும் முதல் செமி பைனலில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. CT வரலாற்றில் இந்தியா 3 முறையும், ஆஸி., 2 முறையும் வென்றுள்ளன. ஒரு மேட்ச் டிராவில் முடிந்தது. லீக் சுற்றில் 3 ஆட்டங்களையும் வென்று கெத்தாக நுழைந்துள்ளது இந்திய அணி, 2023 உலகக் கோப்பை பைனலில் தோல்வி அடைந்ததற்கு ஆஸி.யை பழிதீர்க்க காத்திருக்கிறது. இதில் வெல்லப் போவது யார்?
Similar News
News March 4, 2025
சர்வதேச அரசியலில் மிகப் பெரிய மாற்றம்!

NATO, ஐநா, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகிய அமைப்புகளில் இருந்து வெளியேற USA முடிவு செய்துள்ளது. இது குறித்த மிகப்பெரிய அறிவிப்பு இன்று வெளியாகும் என டிரம்ப் அறிவித்துள்ளார். ஐரோப்பிய நலன்களுக்கு செயல்படும் அமைப்புகளுக்கு ஏன் USA அதிக நிதி வழங்க வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் கேள்வி எழுப்பியுள்ளது. இது சாத்தியமானால், ஐரோப்பா தனித்து விடப்பட்டு, அது ரஷ்யாவுக்கு ஆதரவாக மாறும்.
News March 4, 2025
IND vs AUS போட்டிக்கு புது மைதானம்

CT தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் IND vs AUS அணிகள் இன்று மோதுகின்றன. இந்த தொடரில் இதுவரை நடந்த அனைத்து போட்டிகளையும், IND அணி ஒரே மைதானத்தில் விளையாடியது, மற்ற அணிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்றைய போட்டி புது மைதானத்தில் நடக்க உள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்திவ் சாண்ட்ரி மேற்பார்வையில், எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் இந்த மைதானத்தை தயார் செய்துள்ளது.
News March 4, 2025
இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

அபுதாபியில் உ.பி. பெண் ஷாஜாதி கானுக்கு (33) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2022ல் இவரது பராமரிப்பில் இருந்த 4 மாதக் குழந்தை உயிரிழந்த விவகாரத்தில், அவருக்கு மரண தண்டணை விதிக்கப்பட்டது. இதுகுறித்து அப்பெண்ணின் தந்தை டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், கடந்த பிப்.15ல் தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும், நாளை இறுதி சடங்கு நடைபெற உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.