News April 9, 2024
தக்காளி விலை தாறுமாறாக எகிறுகிறது

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்துவதால் தக்காளி செடிகள் கருகி வருகின்றன. இதனால், தமிழகத்திலேயே மிகப்பெரிய காய்கறி சந்தையான பாலக்கோடு சந்தைக்கு நாள்தோறும் 100 டன் தக்காளி வந்த சூழலில், அது தற்போது வெறும் 3 டன்னாக குறைந்துள்ளது. சில மாதங்களாக கிலோ ₹10, ₹20 என விற்பனையான தக்காளி தற்போது ₹50 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தக்காளி விலை மீண்டும் உயருமோ என்ற அச்சத்தில் இல்லத்தரசிகள் உள்ளனர்.
Similar News
News March 22, 2026
அவர் செத்தது எனக்கு மகிழ்ச்சி: டிரம்ப்

FBI முன்னாள் இயக்குநர் ராபர்ட் முல்லர் (81) 2 நாள்களுக்கு முன் காலமானார். இந்நிலையில், ராபர்ட் முல்லர் இறந்ததில் தான் மகிழ்ச்சியடைவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். முல்லர் இறந்தது நல்லது; அவரால் இனி அப்பாவி மக்களை காயப்படுத்த முடியாது எனவும் கூறியுள்ளார். 2016ம் ஆண்டு டிரம்ப் வெற்றிக்கு பின்னால் ரஷ்யாவின் உதவி இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து முல்லர் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது
News March 22, 2026
667 காலியிடங்கள்.. ₹40,000 சம்பளம்.. APPLY NOW

மத்திய அரசின் கீழ் செயல்படும் மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் 667 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மைனிங், சர்வேயர் உள்ளிட்ட பணிகளுக்கு +2, டிப்ளமோ கல்வித்தகுதி போதுமானது. ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ₹40,000-க்கு மேல் சம்பளம் வழங்கப்படும். 18-30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த <
News March 22, 2026
மண்டியிடாமல் மானத்தோடு செயல்படுவேன்: வேல்முருகன்

திமுக, பெரியண்ணன் மனப்பான்மையுடன் தங்களை அணுகியதால் சுயமரியாதைக்காக <<19446966>>கூட்டணியிலிருந்து விலகியதாக<<>> வேல்முருகன் தெரிவித்துள்ளார். அதிக தொகுதிகள் வழங்கவில்லை என்பதற்காக மட்டும் கூட்டணியிலிருந்து விலகவில்லை; மண்டியிடாமல் மானத்தோடு செயல்படவே விலகியதாகவும் கூறியுள்ளார். சமூக நீதி பேசும் திமுக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு, தமிழர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


