News March 6, 2025
தக்காளி விலை கிலோ வெறும் ₹4

தமிழகத்தின் பல இடங்களில் தக்காளி விலை இதுவரை இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது. கோவையில் ஒரு கிலோ தக்காளி வெறும் ₹6-க்கு விற்பனையாகிறது. ஆனால், அதைவிட மிக குறைவாக திண்டுக்கலில் வெறும் ₹4-க்கு விற்கப்படுகிறது. அதையும் வாங்க ஆள் இல்லாததால் தக்காளிகளை சாலையோரம் கொட்டி விட்டு, விவசாயிகள் வேதனையுடன் செல்கின்றனர். அதிக விளைச்சல், வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை குறைந்துள்ளது.
Similar News
News March 6, 2025
CISF படையில் 3 ஆண்டுகளில் 50,000 பணியிடங்கள்

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) அடுத்த 3 ஆண்டுகளில் 50,000 வீரர்கள் புதிதாக பணியில் சேர்க்கப்பட உள்ளதாக அதன் ஜெனரல் ராஜ்விந்தர் சிங் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் தங்களை தொடர்புகொள்ள நாடு முழுவதும் 10 இடங்களில் பொது தகவல் மையம் அமைக்கப்பட உள்ளதாகவும், இதன்மூலம் அவசர உதவிகள் பெறலாம் என்றும் குறிப்பிட்டார். இளைஞர்களே, இந்த வேலைவாய்ப்பை குறித்து வையுங்கள். விரைவில் அறிவிப்பு வரலாம்.
News March 6, 2025
SK வளர்ச்சியால் பொறாமையா? ஷ்யாம் ஓபன் டாக்

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பற்றி நடிகர் ஷ்யாம் தனது கருத்தை கூறியுள்ளார். நடன நிகழ்ச்சி ஒன்றில் நான் ஜட்ஜாக இருந்த போது, போட்டியாளராக இருந்தவர் சிவகார்த்திகேயன். ஆனால், இப்போது அவர் எங்கே இருக்கிறார் பாருங்கள் என பலரும் என்னிடம் சொல்வார்கள். அடுத்தவர்களை பார்த்து பொறாமைப்படாமல், கடவுள் நமக்கு என்ன கொடுத்திருக்கிறாரோ அதற்கு நன்றி சொன்னாலே போதும். மகிழ்ச்சி தானாக வரும் என ஷ்யாம் கூறினார்.
News March 6, 2025
பெண்களுக்கு சிறப்பு 30% தள்ளுபடி

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு சிறப்பு சலுகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. பண்டிகைக் காலங்களைப் போலவே, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கோ ஆப்டெக்ஸ் கடைகளிலும் 30% தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ₹1000 சேலை சலுகை விலையில் ₹700க்கு விற்கப்படும். பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.