News March 6, 2025

தக்காளி விலை கிலோ வெறும் ₹4

image

தமிழகத்தின் பல இடங்களில் தக்காளி விலை இதுவரை இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது. கோவையில் ஒரு கிலோ தக்காளி வெறும் ₹6-க்கு விற்பனையாகிறது. ஆனால், அதைவிட மிக குறைவாக திண்டுக்கலில் வெறும் ₹4-க்கு விற்கப்படுகிறது. அதையும் வாங்க ஆள் இல்லாததால் தக்காளிகளை சாலையோரம் கொட்டி விட்டு, விவசாயிகள் வேதனையுடன் செல்கின்றனர். அதிக விளைச்சல், வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை குறைந்துள்ளது.

Similar News

News March 6, 2025

மர்ம நோயால் 13 பேர் மரணம்

image

சத்தீஸ்கரின், சுக்மா மாவட்டத்தில் பரவி வரும் மர்ம நோயால் மக்கள் பீதியடைந்துள்ளனர். ஒரு மாதத்திற்குள் 13 பேர் மார்பு வலி மற்றும் இருமல் காரணமாக இறந்துள்ளனர். நோய் – அதன் காரணங்கள் குறித்த எந்த தகவலும் தெரியவில்லை. சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தினர். பருவநிலை மாற்றம் மற்றும் காட்டில் நாள் முழுவதும் உழைத்த பிறகு நீரிழப்பு ஏற்படுவதால் இறப்பு நிகழ்வதாக அவர்கள் நம்புகிறார்கள்.

News March 6, 2025

IPL-ல் ஆடை கட்டுப்பாடு? – பிசிசிஐ புதிய திட்டம்!

image

மார்ச் 22-ல் தொடங்கும் ஐபிஎல் தொடரை காண இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில், வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. போட்டிக்கு பிறகான நிகழ்ச்சியில் வீரர்கள் ஸ்லீவ்லெஸ் ஆடை அணியக் கூடாது என்பதுதான் அந்த கட்டுப்பாடு. இதனை முதல் முறை மீறினால் எச்சரிக்கப்படும் என்றும், அடுத்த முறை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

News March 6, 2025

விஜய்க்கு குவியும் பாராட்டுகள்

image

விஜய் தலைமையிலான தவெக சார்பில் சென்னையில் நாளை இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இதற்காக, தயார் செய்யப்பட்டிருக்கும் அழைப்பிதழில் தவெகவின் கொடியோ, விஜய்யின் போட்டோவோ இடம்பெறாதது பொது மக்களை கவர்ந்துள்ளது. விஜய், அனைவருக்குமான பொதுவான அரசியல் செய்வதாக இணையத்தில் பலர் பாராட்டி வருகின்றனர். இது குறித்த உங்களது கருத்து என்ன?

error: Content is protected !!