News December 4, 2024
தக்காளி காய்ச்சல் அறிகுறியும், தடுக்கும் வழிமுறையும்

காய்ச்சல், தொண்டை எரிச்சல், தொண்டை, வாய், நாக்கில் புண் மற்றும் தலை, கை, கால், முதுகுக்கு கீழ் மற்றும் பாதங்களில் கொப்பளங்கள் தோன்றுதல், பசியின்மை போன்றவை தக்காளி காய்ச்சலின் அறிகுறிகள். சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதன் மூலம் இந்த நோயை தடுக்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் டயப்பர்களை மாற்றியவுடன் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். குழந்தைகள் விளையாடும் பொம்மைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.
Similar News
News September 10, 2025
நாட்டை விட்டு தப்பியோடிய தலைவர்கள்

இந்தியாவை சுற்றியுள்ள அண்டை நாடுகளின் முக்கிய அரசியல் தலைவர்கள் தற்போது சிறையிலும், நாட்டை விட்டு தப்பி ஓடியும், தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்து வருகின்றனர். பொருளாதார வீழ்ச்சி, மாணவர்களின் போராட்டங்கள் இத்தகைய தலைவர்களின் அரசியல் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியுள்ளன. இதனால் தெற்காசிய நாடுகளின் புவிசார் அரசியலே பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளன. மேலே Swipe செய்து வீழ்ந்த தலைவர்களை தெரிந்துகொள்ளுங்கள்.
News September 10, 2025
நாளை கடைசி: ITI தேர்ச்சி போதும்.. 2,418 பணியிடங்கள்..!

மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2,418 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். ஃபிட்டர், கார்பெண்டர், பெயிண்டர், மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் 50% மதிப்பெண்களுடன் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 15 – 24 வயதிற்குள் இருப்பது அவசியம். விண்ணப்பக் கட்டணம் ₹100. விண்ணப்பிக்க விரும்புவர்கள் <
News September 10, 2025
இந்தியா மீது 100% வரி விதிக்க வேண்டும்: டிரம்ப் வலியுறுத்தல்

இந்தியா, சீனா நாடுகள் மீது ஐரோப்பிய யூனியன் 100% வரிவிதிக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் இவை என்பதால், இவர்களுக்கு அதிக வரி விதித்தால் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவார்கள். இதனால் ரஷ்யா அடங்கும் என்று அறிவுரைக் கூறியுள்ளார். இந்தியாவுடன் விரைவில் உடன்பாடு ஏற்படும் என்று கூறிய அடுத்த நாளே மாற்றிப் பேசுகிறார் டிரம்ப்.