News March 17, 2025
தக்காளி, பச்சை மிளகாய் விலை சரிவு.. கலக்கத்தில் விவசாயிகள்

வெளிமாநிலங்களிலிருந்து காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளதால் மாநிலம் முழுவதும் பரவலாக காய்கறிகள் விலை சரிவைக் கண்டுள்ளது. இதனால், ஒட்டன்சத்திரம் சந்தையில் வரலாறு காணாத வகையில் பச்சை மிளகாய் விலை கிலோ ₹10ஆக குறைந்துள்ளது. அதேபோல், தருமபுரியின் வெள்ளிச்சந்தை, கிருஷ்ணகிரியின் ராயக்கோட்டையில் ஒரு கிலோ தக்காளி ₹3க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கண்ணீருடன் சாலையோரங்களில் கொட்டிச் செல்கின்றனர்.
Similar News
News September 24, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை
▶குறள் எண்: 468
▶குறள்: ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.
▶பொருள்: எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்.
News September 24, 2025
பெண் ஜனாதிபதிகளிடம் விருது பெற்றது பெருமை: ஊர்வசி

‘உள்ளொழுக்கு’ என்ற மலையாள படத்தில் நடித்த ஊர்வசிக்கு, சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இது ஊர்வசி வாங்கும் 2-வது தேசிய விருது. 2 தேசிய விருதுகளையும் பெண் ஜனாதிபதிகளிடம் பெற்றது பெருமையாக நினைக்கிறேன் என விருதை பெற்ற பின் ஊர்வசி தெரிவித்துள்ளார். பிரதீபா பாட்டீல் மற்றும் திரவுபதி முர்மு ஆகியோர் கைகளால் விருதுகளை ஊர்வசி வாங்கியுள்ளார்.
News September 24, 2025
USA கிரிக்கெட் சங்கத்தை இடைநீக்கம் செய்தது ICC

அமெரிக்க கிரிக்கெட் சங்கம், ஐசிசியின் சட்ட திட்டங்களை மீறியதால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக முறையான நிர்வாகம் அமைக்கவில்லை, ஒலிம்பிக் அங்கீகாரம் பெறவில்லை, விதிகளை மீறிய செயல்பாடுகள் உள்ளிட்டவையை காரணம் காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி ஐசிசி போட்டிகளில் அமெரிக்காவால் பங்கேற்க முடியாது.