News March 25, 2025
Tollgate கட்டணம் ₹5 முதல் ₹25 வரை உயர்வு

தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் 40இல் ஏப்ரல் 1 முதல் வாகனங்களுக்கான <<15874351>>கட்டணம் <<>>உயர்த்தப்படுகிறது. அதன்படி, ₹5 முதல் ₹25 வரை கட்டணம் அதிகரிக்கிறது. எஞ்சி உள்ள 38 சுங்கச்சாவடிகளில் 2ம் கட்டமாக செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்த்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 சுங்கச்சாவடிகள் புதிதாக திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 2, 2025
இதைப் பற்றி கவலைப்படாதீர்

நீங்கள் என்ன செய்தாலும் பிறருக்கு விமர்சனங்கள் எழும். நீங்கள் என்ன உடை அணிகிறீர்கள். என்ன வண்டி வைத்துள்ளீர்கள், என்ன சாப்பிடுகிறீர்கள் என எல்லாவற்றையும் பற்றி யாராவது ஒருவர் விமர்சித்துக்கொண்டு தான் இருப்பார்கள். அதேபோல உங்கள் கனவுகளை, லட்சியங்களை 4 பேர் விமர்சிக்கதான் செய்வார்கள். அதனால் அடுத்தவர் அபிப்பிராயம் என்ன என்பதை நினைத்து கவலைப்படுவதை விட்டு செயல்பட தொடங்குங்கள்.
News April 2, 2025
பெற்றோர்களே, இதை கவனிங்க

பெற்றோர்களே இந்த விஷயங்களையும் கவனியுங்கள்: *குழந்தைக்கு எவர்சில்வர் பாத்திரங்கள், தட்டுகளில் உணவை கொடுத்து பழக்கவும் *தண்ணீர் பாட்டில் ஸ்டீல் (அ) காப்பரில் வாங்கலாம். வாய் சிறிதான பாட்டில் நல்லது. *பணிக்கு செல்லும் பெற்றோர் ஞாயிறன்று முழு நேரத்தையும் குழந்தையுடன் செலவழியுங்கள் *வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பது நல்லது; பாதுகாப்பும் கூட *பிடிக்காத விஷயத்தை செய்ய வற்புறுத்தாதீர்.
News April 2, 2025
ராசி பலன்கள் (02.04.2025)

➤மேஷம் – அலைச்சல் ➤ரிஷபம் – நிம்மதி ➤மிதுனம் – பாராட்டு ➤கடகம் – அமைதி ➤சிம்மம் – நன்மை ➤கன்னி – லாபம் ➤துலாம் – செலவு ➤விருச்சிகம் – வெற்றி ➤தனுசு – அமைதி ➤மகரம் – பரிவு ➤கும்பம் – பணிவு ➤மீனம் – ஓய்வு.