News April 27, 2025
இன்று பெண்கள் Tri-series: எங்கு, எப்போது பார்க்கலாம்?

இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதும் ODI Tri-Series இன்று தொடங்குகிறது. காலை 10 மணிக்கு இந்தியா – இலங்கை அணிகளின் மேட்சை, FanCode app-ல் காணலாம். இந்திய அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (C), ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹார்லீன் தியோல், ஜெமிமா, ரிச்சா கோஷ், யஸ்திகா, தீப்தி ஷர்மா, அமன்ஜோட் கவுர், கஷ்வீ கவுதம், ஸ்னேஹ் ராணா, அருந்ததி ரெட்டி, தேஜல் ஹசப்னிஸ், ஸ்ரீ சரணி, ஷுச்சி உபாத்யாய்.
Similar News
News April 27, 2025
செந்தில் பாலாஜி திடீர் ட்விஸ்ட்.. CM ஸ்டாலினிடம் வேண்டுகோள்!

அமைச்சர் பதவியிலிருந்து விலகவுள்ள செந்தில் பாலாஜி CM ஸ்டாலினிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தனக்குப் பதிலாகத் தனது தீவிர ஆதரவாளரும், அரவக்குறிச்சியில் அண்ணாமலையை தோற்கடித்தவருமான இளங்கோவுக்கு அமைச்சர் பொறுப்பை வழங்கக் கோரியுள்ளாராம். இதனால், கரூரில் அமைச்சர் பிரதிநிதித்துவம், இருப்பதோடு கட்சியைப் பலப்படுத்த உதவியாக இருக்கும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.
News April 27, 2025
எம்.சாண்ட் விலை ₹1000 குறைகிறது

கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் M-சாண்ட், P-சாண்ட் ஆகியவற்றின் விலையை குறைத்து விற்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. கல் குவாரி, க்ரஷர், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரின் கூட்டம் இன்று காலை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடத்தப்பட்டது. அப்போது, M-சாண்ட் விலையை மெட்ரிக் டன்னுக்கு ₹1000 குறைத்து விற்க விற்பனையாளர்கள் ஒப்புக்கொண்டனர். இதனால், கட்டுமானப் பணிகள் விறுவிறுப்படையும்.
News April 27, 2025
ரேஷன் பருப்பில் கலப்படமா? ஆய்வு செய்ய உத்தரவு

ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட இருந்த பருப்பில் கலப்படம் செய்யப்பட்டதை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அண்மையில் கண்டுபிடித்தார். இதுதொடர்பாக 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த செய்திகள் வெளியானதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள வாணிப கிடங்குகள், ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து, பருப்பின் தரத்தை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.