News April 17, 2025
இன்றைய முக்கிய செய்திகள்!

1) CM ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம். 2) வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்குகளில் SC இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு. 3) 22 மாதங்களுக்குப் பிறகு மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் திறப்பு; பட்டியல் சமூக மக்கள் சாமி தரிசனம். 4) USA துணை அதிபர் J.D.வான்ஸ் குடும்பத்தினருடன் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார். 5) ஆசிய U-18 5000 மீ ரேஸ் வாக்கில் வெள்ளி வென்ற <<16124119>>இந்திய வீரர்<<>>.
Similar News
News November 5, 2025
ITI படித்தவர்களுக்கு வேலை.. 405 பணியிடங்கள்

ஐதராபாத்தில் உள்ள அணு எரிபொருள் நிறுவனத்தில் 405 காலிபணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிட்டர், கணினி ஆப்ரேட்டர், வெல்டர், டர்னர், எலக்ட்ரீசியன், கெமிக்கல் பிளான்ட், மெக்கானிக் உள்ளிட்ட 19 பணிகளுக்கு ஐடிஐ படித்திருந்தால் போதுமானது. 18-25 வயதுக்கு உட்பட்டவர்கள் nfc.gov.in தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
News November 5, 2025
சமூகம் நரகமாகி வருகிறது: சீமான்

கோவை கொடூரத்தால் எல்லோரும் வெட்கி தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக இதுபோன்ற பாலியல் குற்றங்கள் நடப்பதாகவும், நமது சமூகம் வாழ்வதற்கு வாய்ப்பற்ற நரகமாக வருகிறதோ என நினைக்க தோன்றுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால், கல்லூரிக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோருக்கு பாதுகாப்பற்ற சூழலில் வாழ்கிறோமா என்ற நடுக்கம் ஏற்படும் என்றும் சீமான் பேசியுள்ளார்.
News November 5, 2025
நவம்பர் 5: வரலாற்றில் இன்று

*1870–சுதந்திர போராட்ட தலைவர் சித்தரஞ்சன் தாஸ் பிறந்தநாள். *1888-தமிழ் இலக்கிய வரலாற்றை முதலில் எழுதிய அறிஞர் கா.சுப்பிரமணிய பிள்ளை பிறந்தநாள். *1930–மருத்துவர் பூ.பழனியப்பன் பிறந்தநாள். *1952–எழுத்தாளர் வந்தனா சிவா பிறந்தநாள். *2013–செவ்வாய் கோளுக்கு மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. *2007–ஆண்ட்ராய்டு இயங்குதளம் வெளியீடு.


