News March 19, 2024

வாரிசு அரசியலை எதிர்த்த வைகோவின் இன்றைய நிலை?

image

வாரிசு அரசியலை எதிர்த்து மிகப்பெரிய கலகம் செய்து, பல எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய தலைவர்களுடன் திமுகவில் இருந்து பிரிந்து மதிமுக என்ற கட்சியை தொடங்கியவர் தான் வைகோ. ஆனால், காலச் சுழற்சியில் சிக்கிய அவர், கடந்த தேர்தலில் சொந்த சின்னத்தில் கூட நிற்கமுடியாமல் போனது. வேறுவழியில்லை!, மீண்டும் அவரே வாரிசு அரசியலை கையிலெடுத்து, தற்போது மகனுக்கு திருச்சி தொகுதியை விடப்பிடியாக கேட்டு பெற்றிருக்கிறார்.

Similar News

News October 29, 2025

சக்கரவள்ளிக் கிழங்கின் நன்மைகள்

image

சர்க்கரைவள்ளிக் கிழங்கு பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்தது. இதில், நார்ச்சத்து, வைட்டமின் A உள்ளிட்டவை நிறைந்துள்ளன. சக்கரவள்ளிக் கிழங்கை, வேவவைத்து அல்லது அவித்து சாப்பிடுவது சிறந்தது. இதனால், உடலுக்கு என்னென்ன ஆரோக்கியம் ஏற்படும் என்று, மேலே பகிர்ந்துள்ள போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு கிழங்கு பிடிக்குமா? கமெண்ட்ல சொல்லுங்க.

News October 29, 2025

பொய்யும், துரோகமும் EPS History: CM ஸ்டாலின்

image

நெல் கொள்முதலின் அடிப்படையே தெரியாமல் EPS பொய் சொல்லிக்கொண்டு இருப்பதாக CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பொய்யும், துரோகமும்தான் EPS-ன் History எனவும் CM சாடியுள்ளார். DMK ஆட்சியில் ஆண்டுக்கு சராசரியாக 42.61 லட்சம் மெட்ரிக் டன்(MT) நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும், ஆனால் ADMK ஆட்சியில் சராசரியாக 22.70 லட்சம் MT மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

News October 29, 2025

நீதிமன்றம் அனுமதித்தால் விஜய் பிரசாரம் தொடரும்: தவெக

image

நீதிமன்ற அனுமதி கிடைத்ததும் விஜய்யின் பிரசாரம் தொடங்கும் என தவெகவின் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாத வகையில் அடுத்தகட்ட பிரசாரங்களை முன்னெடுக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இதனால் ஒருமாதமாக வீட்டிலேயே முடங்கியிருந்த விஜய், விரைவில் மக்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!