News April 15, 2025

இன்றைய பொன்மொழிகள்

image

▶சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள் ▶பகை, பொறாமையை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேரும் ▶பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது ▶ வெற்றிகளை சந்தித்தவன் இதயம் பூவை போல் மென்மையானது தோல்வி மட்டுமே சந்தித்தவன் இதயம் இரும்பை விட வலிமையானது.

Similar News

News November 27, 2025

சீமான் மீது டிஐஜி தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து

image

சீமானின் தூண்டுதலின் பேரில் தன் மீதும் தன் குடும்பத்தினர் மீதும் நாதகவினர் அவதூறு கருத்து பதிவிட்டு வருவதாக டிஐஜி வருண் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி சீமான் மதுரை HC-ல் மனு தாக்கல் செய்தார். ஏற்கெனவே சீமான் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்திருந்த நிலையில், இப்போது நீதிபதி அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

News November 27, 2025

CINEMA 360°: காதலை தூண்டும் அனிருத்தின் ‘Pattuma’ பாடல்

image

*கோபிசந்த் மாலினேனி இயக்கும் பாலைய்யாவின் 111-வது படம் பூஜையுடன் தொடங்கியது. *சூர்யாவின் கருப்பு படத்தின் ஓடிடி உரிமம் நெட்பிளிக்ஸுக்கும், சாட்டிலைட் உரிமம் ஜீ5-க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. *அனிருத் குரலில் LIK படத்தின் 2-வது பாடலான ‘Pattuma’ வெளியாகியுள்ளது. *நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள லாக் டவுன் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

News November 27, 2025

அக்னிவீர் பணியிடங்களை அதிகரிக்க முடிவு

image

2026-ம் ஆண்டுக்குள் அக்னிவீர் பணியிடங்களை ஆண்டுக்கு 1 லட்சமாக அதிகரிப்பது குறித்து ராணுவம் பரிசீலித்து வருகிறது. அக்னிபாத் திட்டம் தொடங்கப்பட்டு, 2022 முதல் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 40,000 வீரர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். அதேவேளையில், ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறும் வீரர்களின் எண்ணிக்கை 60,000 – 65,000 வரை உள்ளது. இந்த இடைவெளியை குறைக்கும் வகையில், பணியிடங்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!