News March 28, 2025
இன்றைய பொன்மொழிகள்

▶கண்டனத்தைத் தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லையென்றால் கடமையை நிறைவேற்ற முடியாது ▶எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும், நீங்கள் தாங்கித் தாங்கி வலுவைப் பெற்றுக்கொள்ளுங்கள் ▶ஒன்றே குலம், ஒருவனே தேவன் ▶ விதியை நம்பி, மதியை பறிகொடுத்து பகுத்தறிவற்ற மனிதர்களாக வாழ்வது மிக மிக கேடு ▶உலகின் பிளவு குடும்பத்தில் ஆரம்பிக்கிறது.
Similar News
News October 29, 2025
விஜய்யுடன் இணைந்து களமிறங்குகிறார்

அரசியல் களத்தில் விஜய்க்கு ஆதரவாக அவரது தந்தை SAC களமிறங்குகிறார். அதற்கான முன்னெடுப்பாகவே, N.ஆனந்த் எதிர்ப்பாளர்கள் மூவருக்கு தவெக நிர்வாக குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அந்த மூவரும், விஜய்யின் தந்தை SA சந்திரசேகரின் ஆதரவாளர்கள். கருணாநிதி, MGR, ஜெயலலிதா என 3 முதல்வர்களுடன் SAC பயணம் செய்துள்ளார். இது விஜய்க்கு பக்க பலமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
News October 29, 2025
தீபிகாவை மீண்டும் டார்கெட் செய்கிறதா கல்கி படக்குழு?

OTT-ல் ஓடிக்கொண்டிருக்கும் ’கல்கி 2898 AD’ படத்தின் Credits-ல் இருந்து தீபிகா படுகோனின் பெயர் நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்வேன் என கூறியதால் கல்கி 2 படத்தின் ப்ராஜெக்ட்டில் இருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கல்கி படக்குழுவின் இச்செயல் குழந்தைத்தனமாக உள்ளது என ரசிகர்கள் சாடி வருகின்றனர்.
News October 29, 2025
யாரை காப்பாற்ற DMK அரசு துடிக்கிறது? அன்புமணி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் CBI விசாரணைக்கு ஐகோர்ட் ஆணையிட்டதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் 2-வது முறையாக TN அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதை சுட்டிக்காட்டியுள்ள அன்புமணி, யாரை காப்பாற்ற DMK அரசு முட்டுக்கட்டைகளை போட்டு வருகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். TN காவல்துறை செயல்திறனையும், நம்பகத்தன்மையும் இழந்து வருவதாக கூறியுள்ள அவர், மனுவை திரும்ப பெற வலியுறுத்தியுள்ளார்.


