News February 26, 2025

இன்றைய பொன்மொழிகள்

image

▶மனித குலத்தின் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் அமைதி. ▶பலவீனமானவர்களால் ஒருபோதும் மன்னிக்க முடியாது. மன்னித்தல் என்பது வலிமையானவர்களின் பண்பாகும். ▶நோயைக் காட்டிலும் நோயைப் பற்றிய பயமே அதிகமான மனிதர்களை கொன்றுள்ளது. ▶மனிதர்களாகிய நமது மிகப்பெரிய திறமை இந்த உலகை மாற்றுவது அல்ல. மாறாக நம்மை நாமே மாற்றிக் கொள்வது.

Similar News

News February 26, 2025

தங்கம் விலை சவரனுக்கு ₹200 குறைவு

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.26) சவரனுக்கு ₹200 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,050க்கும், சவரன் ₹64,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ₹2 குறைந்து ₹106க்கும், கிலோ வெள்ளி ₹1,06,00க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை சரிவால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் விலை திடீர் சரிவு குறித்து உங்கள் கருத்து என்ன?

News February 26, 2025

தவெக விழாவில் 20 வகையான கமகமக்கும் விருந்து!

image

த.வெ.க.வின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழா, பொதுக்கூட்டத்திற்கு வருபவர்களுக்கு கமகம விருந்து தயாராகி வருகிறது. அதில், கேரட் அல்வா, வடை, காலிப்பிளவர் 65, பூரி, பட்டானி குருமா, வெஜ் பிரியாணி, தயிர் பச்சடி, சாதம், கதம்ப சாம்பார், ரசம், வெண்ணிலா ஐஸ்கிரீம், தயிர், பீன்ஸ் பருப்பு உசிலி, மோர், அப்பளம், வாழைப்பழம், ஊறுகாய், தண்ணிர் பாட்டில், அடைப் பிரதமம் ஆகியவை மொத்த மாமல்லபுரத்தையே மணமணக்க செய்துள்ளது.

News February 26, 2025

மின்தடையால் சிலியில் அவசரநிலை

image

சிலி நாட்டில் ஏற்பட்ட மின் தடை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கி, போக்குவரத்து, இன்டர்நெட் என அனைத்து சேவைகளும் முடங்கியுள்ளன. காப்பர் ஆலைகளிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நிலைமையை சமாளிக்க சிலி அரசு அவசர நிலை அமல்படுத்தியுள்ளது. இரவு முதல் காலை வரை ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மின் தடைக்கு சைபர் தாக்குதல் காரணமல்ல என சிலி அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

error: Content is protected !!