News March 14, 2025
இன்றைய பொன்மொழிகள்!

▶விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை. ▶கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலான மரண போராட்டம் தான் புரட்சி. ▶உன்னை அதிகம் விமர்சிப்பவனே உன்னை கண்டு அதிகம் பயப்படுகிறான். ▶ஒரு புரட்சியாளன் என்பவன் தனது இலட்சியத்தை ஒளிவு மறைவின்றி தனது பகைவர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். ▶தடம் பார்த்து நடப்பவன் மனிதன்; தடம் பதித்து நடப்பவன் புரட்சியாளன்.
– பிடல் காஸ்ட்ரோ.
Similar News
News March 5, 2026
இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா?

இந்திய பெருங்கடல் பகுதியில் ஈரானின் போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்கி அழித்தது. இதனால், ஈரானுக்கு எதிராக இந்திய துறைமுகங்களை USA பயன்படுத்துவதாக அந்நாட்டின் பாதுகாப்பு துறையின் முன்னாள் ஆலோசகர் டக்ளஸ் மெக்ரிகோர் குற்றஞ்சாட்டியிருந்தார். இது அடிப்படை ஆதாரமற்றது என மறுத்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், தவறான தகவல் பரப்பியதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
News March 5, 2026
மார்ச் 5: வரலாற்றில் இன்று

*1953 – சோவியத் யூனியனின் சர்வாதிகாரி ஸ்டாலின் நினைவு நாள் *1956 – நடிகை ஸ்ரீபிரியா பிறந்தநாள் *1958 – நடிகர் நாசர் பிறந்தநாள் *1959 – அரசியல்வாதி சிவ்ராஜ் சிங் சௌஹான் பிறந்தநாள் *1976 – இயக்குநர் செல்வராகவன் பிறந்தநாள் *2008 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை *2013 – நடிகை ராஜசுலோசனா நினைவு நாள்
News March 5, 2026
‘B-2 Bomber’ பின்னணியில் இந்திய வம்சாவளி

உலகிலேயே பயங்கர போர் விமானமான B-2 Bomber-ஐ ஈரான் மீது USA பயன்படுத்துகிறது. இதன் உருவாக்கத்தில் நோஷிர் கோவாடியா என்ற இந்திய வம்சாவளியின் பங்கும் உண்டு. 1944 மும்பையில் பிறந்த இவர், USA-ல் Aeronautical Eng படித்தார். பிறகு Northrop Grumman என்கிற போர் விமானங்களை உருவாக்கும் கம்பெனியில் பணியாற்றினார். ஆனால், இதுபற்றி சீனாவிற்கு தகவல் தந்ததாக USA கோர்ட் அவருக்கு 32 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.


