News March 11, 2025

இன்றைய பொன்மொழிகள்!

image

*பணம் இருந்தால் தான், நாலு பேர் நம்மை மதிப்பார்கள் என்றால், அந்த மானங்கெட்ட மதிப்பு தேவையே இல்லை. *பிறர் உழைப்பை தன் சுயநலத்திற்காக பயன்படுத்துவதே, உலகின் மிகவும் கேவலமான செயலாகும். *வறுமையும் அறியாமையும் போகாமல் நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது. *பெண்கள் விழிப்பு அடைந்தால் குடும்பம் முன்னேறும், கிராமங்கள் முன்னேறும், தேசமே முன்னேறும் – காமராஜர்.

Similar News

News March 11, 2025

சி.பி. ராதாகிருஷ்ணன் – இபிஎஸ் திடீர் சந்திப்பு

image

கோவையில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்- இபிஎஸ் இருவரும் சந்தித்துக்கொண்டனர். எஸ்.பி வேலுமணி வீட்டு திருமணத்தில் கலந்துகொள்ள கோவை வந்த இருவரும், நிகழ்ச்சி முடிந்து சென்னை திரும்பும் பொருட்டு விமான நிலையம் வந்துள்ளனர். அப்போது இருவரும் சில நிமிடங்கள் தனியாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

News March 11, 2025

புதிய மாவட்டம் உருவாகிறது?

image

திண்டுக்கல் மாவட்டத்தை இரண்டாக பிரித்து பழநியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், புதிதாக உருவாகும் பழநி மாவட்டத்துடன் இணைய மாட்டோம் என்று உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேபோல், கொடைக்கானல் திண்டுக்கல்லுடன் இருக்க வேண்டும் என்றும், பழநியுடன் இணைக்கக் கூடாது எனவும் குரல் எழுப்பியுள்ளனர்.

News March 11, 2025

வேறு ஒரு பெண்ணுடன் இருந்த சாஹல்..! தனஸ்ரீ வைரல் பதிவு!

image

CT தொடர் பைனலின் போது,<<15710307>> சாஹல் ஒரு பெண்ணுடன்<<>> அமர்ந்திருந்த காட்சிகள் வைரலாகின. இதனைத் தொடர்ந்து, அவரின் முன்னாள் மனைவி தனஸ்ரீ வர்மாவின் இன்ஸ்டா பதிவு கவனம் ஈர்த்துள்ளது. அதில், ‘பெண்களைக் குறை கூறுவது ஃபேசனாகிவிட்டது’ என்று சிம்பிளாக பதிவிட்டுள்ளார். இருவரும் விவாகரத்து செய்த போது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார் தனஸ்ரீ.

error: Content is protected !!