News March 9, 2025
இன்றைய பொன்மொழிகள்!

*அதிகமாக சாதிப்பதற்கு, முதலில் நீங்கள் அனைத்தையும் இழக்க வேண்டும். *செயல்கள் அற்ற வார்த்தைகள் மதிப்பற்றவை. *நீ ஊமையாய் இருக்கும் வரை உலகம் செவிடாய் தான் இருக்கும். *மண்டியிட்டு வாழ்வதைவிட, நிமிர்ந்து சாவது மேலானது. *எதிரிகளும், தோல்வியும் இல்லாத வாழ்க்கை வாழ்ந்தவன், முழுமையாக வாழவில்லை என்றே அர்த்தம். * எழுதப் படிக்கத் தெரியாத ஒரு நாட்டை ஏமாற்றுவது எளிதானது – சே குவேரா.
Similar News
News March 9, 2025
11ஆம் வகுப்பு மாணவனுடன் ஓடிய 36 வயது பெண்!

மகாராஷ்ட்ரா, நாக்பூரில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவனுக்கும், 3 பிள்ளைகளின் தாயான 36 வயது பெண்ணுக்கும் இடையே தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அவனது பெற்றோர், சிறுவனை வேறு
இடத்தில் தங்க வைத்துள்ளனர். ஆனாலும், அப்பெண் மீது கொண்ட மோகத்தால், அச்சிறுவன் ஊரை விட்டு ஓடியுள்ளார். புகாரின் பேரில் சிறுவனை கண்டுபிடித்த போலீசார், அப்பெண் மீது கடத்தல் வழக்கை பதிவு செய்துள்ளனர். கலிகாலம்டா சாமி.
News March 9, 2025
இன்னும் 46 ரன்களே… புதிய சாதனைக்கு ரெடியாகும் ‘கிங்’…!

ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சாதனைக்கு மேல் சாதனை படைத்து வருகிறார். அந்த வரிசையில் இன்றைய ஆட்டத்தில் மேலும் ஒரு சாதனை காத்திருக்கிறது. சாம்பியன் டிராபி தொடர்களில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை படைக்க அவருக்கு 46 ரன்களே தேவை. கோலி 746 ரன்கள் எடுத்துள்ள நிலையில், கிறிஸ் கெய்ல் 791 ரன்களுடன் பட்டியலில் முதலில் உள்ளார்.
News March 9, 2025
₹99 லட்சம் பரிசு .. பாஜக அறிவிப்பு

மத்திய பாஜக அரசு இந்தியை திணிப்பதாக பல அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், மோடி அரசின் மும்மொழி கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பை கண்டுபிடித்தால் ₹99 லட்சம் பரிசு வழங்கப்படும் என பாஜக சார்பில் திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், திமுக அமைச்சர் மகனுக்கு கிடைக்கும் கல்வி, ஏழை எளியவர்களின் மகனுக்கும் கிடைக்கக் கூடாதா? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.