News May 2, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்

▶காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் பின்னால் அனைவரும் நிற்க வேண்டும்: வைகோ
▶தமிழகத்தின் மின் நுகர்வு புதிய உச்சம் தொட்டது
▶நாட்டில் 70 கோடி பேர் வேலை இல்லாமல் தவிக்கின்றனர்: பிரியங்கா காந்தி
▶இன்று 19 மாவட்டங்களில் வெயில் கொளுத்தும்: வானிலை ஆய்வு மையம்
▶தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை கொண்டுவர பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: மம்தா
▶IPL: சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி
Similar News
News January 29, 2026
ஜல்லிக்கட்டு வழக்கில் 57 பேர் விடுவிப்பு

2017-ம் ஆண்டு அலங்காநல்லூரில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் 57 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அப்போதைய முதல்வர் EPS, ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்திருந்தாலும், CBCID பதிவு செய்த வழக்குகள் மட்டும் ரத்தாகாமல் இருந்தது. இந்நிலையில், 9 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கில் இருந்து 57 பேரையும் விடுவித்து மதுரை HC உத்தரவிட்டுள்ளது.
News January 29, 2026
‘கருத்துப் பெட்டி’ மக்களை நாடும் தவெக

தவெக தேர்தல் அறிக்கையை தயாரிக்க 12 பேர் கொண்ட குழுவை விஜய் அறிவித்திருந்தார். இந்நிலையில், இக்குழுவானது TN முழுவதும் பிப்.1 முதல் பிப்.11 வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இதில், கருத்துப் பெட்டி வைத்து பொதுமக்களின் கோரிக்கைகள் பெறப்படும் என்றும், அதன் அடிப்படையில் TN-ஐ வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
News January 29, 2026
தமிழக தேர்தல் தேதி விரைவில் வெளியாகிறது

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி மார்ச் முதல் (அ) 2-வது வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தமிழகம், கேரளா, மே.வங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பணிகள் குறித்து பிப்.4, 5-ல் ஆலோசனை நடத்துவதாக ECI அறிவித்துள்ளது. இதில் பங்கேற்குமாறு, தேர்தல் பார்வையாளர்களாக பணியாற்றவுள்ள IAS, IPS, உள்துறை செயலர்கள் ஆகியோருக்கும் ECI அழைப்பு விடுத்துள்ளது.


