News April 22, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்!

*தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 69.72% வாக்குகள் பதிவாகியிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் இறுதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. *தனது கணவரை பாஜக கொலை செய்ய முயற்சிப்பதாக கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா குற்றம்சாட்டியுள்ளார் * ஐபிஎல்: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி * பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
Similar News
News January 27, 2026
முதலிரவு முடியும் முன்பே குழந்தை பிறந்தது

முதலிரவு முடிவதற்குள்ளாகவே பிரசவ வலி வந்து ஒரு பெண் குழந்தை பெற்றெடுத்த அதிர்ச்சி சம்பவம் உ.பி.,யில் நிகழ்ந்துள்ளது. திருமணத்திற்கு முன்பே காதலித்து வந்த இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். பின்னர் கருவுற்றது தெரிய வர, போலீஸை அணுகி இருவீட்டாருடன் பேச்சுவார்த்தை நடத்தி திருமணம் நடைபெற்றுள்ளது. முதலிரவு அன்று பெட் ரூமுக்கு சென்ற மணமகள் வயிறு வலியால் துடிக்கவே, குழந்தை பிறந்துள்ளது.
News January 27, 2026
காப்பர்தான் அடுத்த தங்கமா?

தங்கம், வெள்ளி விலையை தொடர்ந்து இப்போது காப்பரின்(செப்பு) விலையும் அதிரடியாக உயர்வு கண்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்களின் கவனம் காப்பரின் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் இது 62% லாபத்தை முதலீட்டாளர்களுக்குத் தந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தை அறுவடை செய்ய வேண்டுமானால், அதில் டிரேடிங் செய்வது நல்ல ஆப்ஷன் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால், சரியான ஆலோசனை பெற்று முதலீடு செய்யுங்க.
News January 27, 2026
வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும் ஐரோப்பிய டீல்: PM

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற <<18909962>>வர்த்தக ஒப்பந்தம்<<>> இந்திய மக்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கும் என PM மோடி கூறியுள்ளார். 4-வது இந்திய எரிசக்தி வாரத்தை தொடங்கி வைத்துப் பேசிய பிறகு அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஒப்பந்தம் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% மதிப்புடையது என்றும் உலக வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


