News April 16, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்!

*நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்க பாஜக அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் – மம்தா பானர்ஜி
*10 ஆண்டுகளில் விவசாயிகள் நலனுக்கு மோடி அரசு செய்தது என்ன? – கமல்
*பாமக இல்லாவிட்டால் திராவிட ஆட்சியாளர்கள் டெல்டாவை அழித்திருப்பர் – அன்புமணி
*5 ஆண்டுகளில் மூத்த குடிமக்களின் வைப்புத்தொகை 150% உயர்ந்துள்ளது – எஸ்பிஐ
*RCB அணிக்கு எதிரான ஆட்டத்தில் SRH அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
Similar News
News November 20, 2025
டெல்லி குண்டுவெடிப்பு.. மேலும் 4 பேர் கைது

டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக மேலும் 4 பேரை NIA கைது செய்துள்ளது. இதில், 3 பேர் டாக்டர்கள் ஆவர். கைது செய்யப்பட்ட 4 பேரும் டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க NIA-வுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவ.10-ல் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
News November 20, 2025
காதலை எந்த மொழியில் எப்படி சொல்கிறார்கள்?

‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்பதை ஒவ்வொரு மொழியிலும் எப்படி சொல்கிறார்கள் என்று தெரியுமா? பெரும்பாலும் ஆங்கிலத்தில் ‘ஐ லவ் யூ’ என்றுதான் பலரும் சொல்கின்றனர். ஆனால், இந்தியாவில் பேசப்படும் மொழிகளில், காதலை எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News November 20, 2025
விஜய்யுடன் கூட்டணி.. அறிவிப்பு வெளியானது

விஜய்யின் அரசியல் வருகையால், 2026 தேர்தல் களம் வழக்கத்திற்கு மாறான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், தவெக கைகோர்க்கவுள்ள கூட்டணி மீதும் அக்கட்சி தொண்டர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில், விரைவில் ‘CSK’ என்ற கட்சியை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ள கூல் சுரேஷ், நிச்சயமாக விஜய்யுடன் கூட்டணி அமைப்பேன் என உறுதிபட தெரிவித்துள்ளார். சுரேஷின் அறிவிப்பு குறித்து உங்கள் கருத்து என்ன?


