News April 9, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்

➤ தேர்தலுக்காக 10,214 சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு
➤ கமலிடம் மனநல சோதனை நடத்த வேண்டும் – அண்ணாமலை
➤ மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார்
➤ ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை
➤ விவாகரத்து கோரி நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா மனு
➤ தோனியை வீழ்த்துவது கடினம் – கம்பீர்
Similar News
News March 14, 2026
எண்ணெய் கப்பல்களுக்கு ஈரானின் புது ரூல்ஸ்

டாலருக்கு பதிலாக சீன யுவானில் எண்ணெய் வர்த்தகம் மேற்கொள்ள வேண்டுமென ஈரான் நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி செய்தால் மட்டுமே சில எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியே செல்வதற்கு அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது எண்ணெய் வணிகம் டாலரில் மட்டுமே நடைபெறுவதால், டாலர் சக்திவாய்ந்த கரன்சியாக உள்ளது. ஈரானின் முடிவு டாலர் ஆதிக்கத்திற்கு சவால் விடுத்துள்ளது.
News March 14, 2026
பெட்ரோலை கேன்களில் பிடிக்காதீர்.. அரசு எச்சரிக்கை

நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்களிலும் போதுமான அளவு பெட்ரோல், டீசல் இருப்பதாக மத்திய பெட்ரோல் & இயற்கை எரிவாயு அமைச்சகம் கூறியுள்ளது. TN-ல் கேன்களில் பெட்ரோல் வாங்கிச் செல்வதை சுட்டிக்காட்டியுள்ள மத்திய அரசு, இதுபோன்ற செயல்கள் ஆபத்தை விளைவிக்கும் என தெரிவித்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட பங்க் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், பங்க்குகள் & டீலர்கள் விதிகளை மீறக்கூடாது எனவும் எச்சரித்துள்ளது.
News March 14, 2026
பழம்பெரும் நடிகை மது காலமானார்

பழம்பெரும் நடிகை மது மல்ஹோத்ரா(72) காலமானார். 80’ஸ் காலக்கட்டத்தில் பாலிவுட்டில் கொடிகட்டி பறந்த அவரது கண்ணசைவை காணவே தியேட்டர்களுக்கு படையெடுத்த ரசிகர்கள் ஏராளம். அமிதாப் பச்சனின் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள அவர், SATTE PE SATTA, KARZ, VISHWANATH உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


