News March 18, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்

➤ பிரதமர் மோடி இன்று மாலை கோவை வருகிறார் ➤ ரஷ்ய அதிபர் தேர்தலில் புதின் மீண்டும் வெற்றி பெறுவார் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல் ➤ அதிமுக – பாமக கூட்டணி குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென தகவல் வெளியாகியுள்ளது. ➤ தென்னிந்திய சினிமா டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக நடிகர் ராதாரவி மீண்டும் தேர்வானார். ➤ WPL தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது பெங்களூரு அணி
Similar News
News November 27, 2025
முதலிரவுக்கு மறுத்த மனைவி.. அடுத்து நடந்த விபரீதம்

சென்னையில் முதலிரவில் சண்டை ஏற்பட்டதால் மனைவியை சுத்தியலால் கணவன் தாக்கிய கொடுமை அரங்கேறியுள்ளது. அகஸ்டின் ஜோஷ்வா(33) என்பவர், திருத்தணியைச் சேர்ந்த பெண்ணை கரம்பிடித்துள்ளார். முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அந்த பெண் தாம்பத்யத்திற்கு மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், ஏற்பட்ட சண்டையில் மனைவியை சுத்தியலால் ஜோஷ்வா தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் கணவனை போலீஸ் கைது செய்துள்ளது.
News November 27, 2025
என்னை மன்னித்துவிடுங்கள்: ரிஷப் பண்ட் வருத்தம்

SA-வுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விக்கு வருத்தம் தெரிவித்து ரிஷப் பண்ட் X தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2 வாரமாக நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொள்வதில் எந்த அவமானமும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எப்போதும் தரமான கிரிக்கெட்டை விளையாடி மக்களை மகிழ்ச்சிப்படுத்தவே விரும்புவோம், ஆனால் இம்முறை அதை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.
News November 27, 2025
தமிழக அரசில் 1,100 காலியிடங்கள்!

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ✱காலியிடங்கள்: 1100 Assistant Surgeon (General)✱வயது : 18 – 37 வரை ✱கல்வித்தகுதி: MBBS ✱தேர்ச்சி முறை: கணினி தேர்வு ✱சம்பளம்: ₹56,100 – ₹2,05,700 விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.12.2025 ✱முழு விவரங்களுக்கு <


