News April 6, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்

▶ஆளுநர் அல்லது மத்திய அமைச்சர் ஆகும் திட்டம் எனக்கு இல்லை: ஓபிஎஸ்
▶ஒரே நாளில் 44.08 கோடி யூனிட் மின்சாரத்தை தமிழ்நாடு நுகர்ந்துள்ளது
▶அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
▶தமிழகம் முழுவதும் 44 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
▶தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது: பிரேமலதா
▶ஐபில்: சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி
Similar News
News February 12, 2026
வெங்காயம், தக்காளி விலை சரசரவென குறைந்தது

வெங்காயமும் தக்காளியும் சமையலுக்கு என்றுமே அத்தியாவசியமானவை. சீசன் இல்லாத நேரங்களில் இவற்றின் விலை நம்மை கிறுகிறுக்க வைக்கும். இந்நிலையில், தற்போது இவ்விரண்டின் விலையும் சரசரவென குறைந்துள்ளது. வெங்காயம் 6 கிலோ ₹100-க்கும், தக்காளி 1 கிலோ ₹8 – 10-க்கும் விற்பனையாகிறது. இதனால் சில்லறை கடைகளில் வெங்காயம் கிலோ ₹20, தக்காளி கிலோ ₹12 – ₹15 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. உங்கள் ஊரில் விலை என்ன?
News February 12, 2026
MGR, மோடி ஒத்த சிந்தனை கொண்டவர்கள்: நயினார்

பாஜக, அதிமுக இரண்டுமே மக்களுக்காக உழைக்கும் இயக்கங்கள் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பெண்களுக்காக, இளைஞர்களுக்காக, தமிழுக்காக எதையும் செய்வதில் MGR-ம், மோடியும் ஒரே சிந்தனை கொண்டவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மலேசியாவுக்கு சென்றால் கூட தமிழை பற்றி மோடி பெருமையாக பேசுவதாக குறிப்பிட்ட அவர், தமிழுக்கு எதிரானவர் PM என CM ஸ்டாலின் சொல்வது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார்.
News February 12, 2026
திமுக அமைச்சரின் கருத்துக்கு செல்வப்பெருந்தகை பதிலடி

காங்கிரஸ் வந்தால் வரட்டும் வராவிட்டால் போகட்டும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதற்கு செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார். மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற செல்வப்பெருந்தகையிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அப்போது அவருடைய (ராஜகண்னப்பன்) கருத்தையெல்லாம் ஏன் பொருட்படுத்துகிறீர்கள் என ஒரே வரியில் கடந்து சென்றார்.


