News April 19, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!

1) அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது <<16145414>>SDPI<<>>; அதிமுக மெல்ல அழியும் எனவும் காட்டம். 2) தமிழகத்தில் நாளை முதல் 24-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. 3) <<16145613>>டெல்லியில் அடுக்குமாடி<<>> கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலி; பலர் மாயமானதால் அச்சம். 4) ஜேஇஇ முதல்நிலை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது. 5) U-18 ஆசிய தடகளம்: ஈட்டி எறிதலில் இந்தியாவுக்குத் தங்கம்.
Similar News
News September 9, 2025
BREAKING: துணை ஜனாதிபதி தேர்தல் நிறைவு

காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இரு அவைகளிலும் மொத்தம் 782 MP-க்கள் உள்ள நிலையில், 392 வாக்குகளை பெறுபவர் வெற்றி பெறுவார். NDA கூட்டணிக்கு இரு அவைகளிலும் சேர்த்து 422 MP-க்களின் ஆதரவு இருப்பதால், அதன் சார்பில் போட்டியிடும் சிபி ராதாகிருஷ்ணன் வெல்ல அதிக வாய்ப்புள்ளது. மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.
News September 9, 2025
ITR தாக்கல் செய்ய கடைசி நாளில் முட்டி மோத வேண்டாம்!

2025-ம் ஆண்டிற்கான வருமான வரித்தாக்கல் செய்ய செப்.15 கடைசி நாளாகும். தாமதமாக தாக்கல் செய்தால், வட்டி, ரீஃபண்ட் கிடைப்பதில் தாமதம் போன்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும். கடைசி நாளில் பார்த்துக் கொள்ளலாம் என அலட்சியமாக இருந்து, போர்ட்டர் சுமையால் பலராலும் தாக்கல் செய்ய முடியாமல் போகலாம். ஒரு வாரமே இருப்பதால் முன்கூட்டியே திட்டமிடுங்கள். SHARE IT.
News September 9, 2025
ஆசிய கோப்பை போட்டிகளை எப்படி பார்ப்பது?

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றிரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது. போட்டியை எப்படி பார்ப்பது என பலருக்கும் சந்தேகம் இருக்கும். இந்தியாவை பொறுத்தவரை சோனி குழுமம்தான் ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ளது. அனைத்து போட்டிகளும் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பாகும். மேலும், சோனி லைவ் ஆப், இணையதளத்திலும் பார்க்கலாம். சப்ஸ்கிரிப்ஷன் செய்வது அவசியம். SHARE IT.