News August 23, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்

➤உக்ரைன் தலைநகர் கீவ்வில் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். ➤17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இன்று நடைபெற உள்ள மகளிர் தங்க மெடலுக்கான போட்டியில், இந்திய வீராங்கனைகள் காஜல் (69kg), சிவாஜி பாட்டில் (46kg) பங்கேற்கின்றனர். ➤பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘கொட்டுக்காளி’, ‘வாழை’ படங்கள் இன்று ரிலீசாகிறது.
Similar News
News August 10, 2025
இலவசங்கள் இல்லாத TVK தேர்தல் அறிக்கை

2026 தேர்தலுக்கான அறிக்கையை தயாரிப்புப் பணியில் தவெக தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக, அதிமுக தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் இடம்பெறுவது வழக்கம். ஆனால், தவெக தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் எதுவும் இடம்பெறக் கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறாராம். மக்களை நேரில் சந்தித்து தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்களை கேட்டறிய நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
News August 10, 2025
‘உஜ்வாலா’ GAS மானியத்தில் மாற்றம் செய்த மத்திய அரசு

உஜ்வாலா திட்டத்தில் சிலிண்டருக்கான மானியம் இனி 9 மாதங்களுக்கு மட்டுமே தலா ₹300 வழங்கப்படவுள்ளது. 2023 அக். மாதம் முதல் மாதந்தோறும், 12 மாதங்களுக்கு தலா ₹300 வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி 9 மாதங்களுக்கு மட்டுமே மானியம் கிடைக்கும். 2025 – 2026 நிதியாண்டில் இத்திட்டத்திற்காக ₹12,060 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 10.33 கோடி குடும்பங்கள் இத்திட்டத்தில் பயன்பெற்று வருவது கவனிக்கத்தக்கது.