News August 13, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

▶ தமிழகம் முழுவதும் பரவலாக மழை
▶ கல்வியை யாராலும் பறிக்க முடியாது: ஸ்டாலின்
▶ திமுக மக்களுக்கு விரோதமாக செயல்படுகிறது: அண்ணாமலை
▶ உதயநிதி துணை முதல்வராக வேண்டும்: அமைச்சர் மஸ்தான்
▶ குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது
▶ கொட்டுக்காளி படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியீடு

Similar News

News March 7, 2026

FLASH: விஜய் மனைவி சங்கீதா வேதனை!

image

செங்கல்பட்டு கோர்ட்டில் <<19319427>>சங்கீதா தாக்கல்<<>> செய்துள்ள புதிய மனுவில் பல்வேறு தகவல்களை அவர் குறிப்பிட்டுள்ளார். 26 வருடங்கள் விஜய் உடன் குடும்பம் நடத்தி 2 குழந்தைகளை பெற்று வளர்த்துள்ளதாகவும், நல்ல குடும்ப தலைவியாக இருந்ததாகவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சினிமாவில் கோடி கோடியாக சம்பாதித்த விஜய், தனக்கும் தனது குழந்தைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

News March 7, 2026

யாரை பற்றி பதிவிட்டிருக்கிறார் கிருத்திகா உதயநிதி?

image

ஒரு செலிபிரிட்டி எப்போது பிரச்னையில் சிக்குகிறார் என்பதை பற்றி கிருத்திகா உதயநிதி பதிவிட்டுள்ளார். மக்கள் தன்னை எப்படி பார்க்கிறார்களோ அதுதான் நான் என நினைக்க தொடங்கி, எப்போது ஒரு செலிபிரிட்டி தன்னுடைய சுயத்தை கைவிடுகிறாரோ அப்போது அவர் பிரச்னையில் சிக்குகிறார் என்று அர்த்தம் என பதிவிட்டுள்ளார். இதனால் யாரை பற்றி கிருத்திகா சொல்லவருகிறார் என X தளத்தில் விவாதம் கிளம்பியுள்ளது.

News March 7, 2026

ஒரு பக்கம் போர், மறுபக்கம் பூகம்பம்… துயரத்தில் ஈரான்

image

இஸ்ரேல் தாக்குதலால் கடும் பாதிப்பில் இருக்கும் ஈரானில், இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் மேலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு ஈரானில் பண்டார் அப்பாஸ் என்ற இடத்தில் 4.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள நிலநடுக்கம், 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக USGS அமைப்பு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த செவ்வாயன்று நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், இந்த நிலநடுக்கம் அங்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!