News August 11, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்

▶ ஜெயலலிதா குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் சர்ச்சை பேச்சு
▶ விஜய்யால் 2026இல் அரசியல் களம் மாறும்: அண்ணாமலை
▶ தமிழ்நாட்டில் 8 மாதங்களில் 656 கொலைகள் : உதயகுமார்
▶ ஆம்ஸ்ட்ராங் மனைவி மீது வழக்கு: அதிமுக கண்டனம்
▶ கேரளாவுக்கு தேவையான உதவி செய்யப்படும்: பிரதமர் மோடி
▶ RR பயிற்சியாளராகும் டிராவிட்?
Similar News
News November 6, 2025
இனி கட்டணம் இல்லாமல் டிக்கெட் கேன்சல்: DGCA

விமான பயணிகளின் புகார்களை தொடர்ந்து, டிக்கெட் ரத்து மற்றும் பணத்தை திருப்பி அளிக்கும் நடைமுறைகளை மாற்றியமைக்க, DGCA புதிய வரைவு விதிகளை முன்மொழிந்துள்ளது. குறிப்பாக விமான டிக்கெட் முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள் எந்த கூடுதல் கட்டணமும் இன்றி டிக்கெட்டை ரத்து செய்ய அல்லது மாற்ற முன்மொழியப்பட்டுள்ளது. இது குறித்து மக்களின் கருத்துகளை பெற்ற பின், நவ.30-க்கு பிறகு விதிகள் இறுதி செய்யப்படும்.
News November 6, 2025
BREAKING: இந்த கட்சியுடன் விஜய் கூட்டணியா?

தவெக பொதுக்குழுவில் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்பட்ட நிலையில், அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சை தொடங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டிடிவியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தவெக எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதா என்பதை பொதுவெளியில் சொல்ல முடியாது என்று பதிலளித்தார். மேலும், விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமையும்; அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
News November 6, 2025
தேதி குறிச்சாச்சு.. விரைவில் ரஷ்மிகாவுக்கு கல்யாணம்!

விஜய் தேவரகொண்டா- ரஷ்மிகா மந்தனா இருவருக்கும் கடந்த அக்டோபர் 3-ம் தேதி, நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக கூறப்பட்டது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பே இன்னும் வெளியாகாத நிலையில், அவர்களின் திருமண தேதி குறித்த தகவலும் வெளிவந்துவிட்டது. அடுத்த வருடம், பிப்ரவரி 26-ம் தேதி, ராஜஸ்தானின் உதய்பூர் மாளிகையில் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.


