News August 6, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்!

*தமிழகத்தில் கூலிப் படை கலாசாரத்தை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் – திருமாவளவன் *தமிழகத்தை 3 மாநிலமாக பிரித்தால் ₹45,000 கோடி நிதி பெற்றுத் தருவோம் -பாஜக ராமலிங்கம் *உஜ்ஜைன் கோயிலில் 1500 போ் உடுக்கை வாசித்து ‘கின்னஸ்’ சாதனை *2024-25ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஏர்டெல் ₹4,717 கோடி லாபம் ஈட்டியுள்ளது *ICC சிறந்த வீராங்கனை விருதுக்கு ஸ்மிருதி மந்தனாவின் பெயர் பரிந்துரை
Similar News
News March 26, 2026
ராம நவமி வழிபாட்டின் ‘8’ முக்கிய விதிமுறைகள்!

ராமநவமி நாளான இன்று இவற்றை பின்பற்றுங்கள்: வீட்டை சுத்தமாக வைத்திருங்கள் ◆காலையில் புனித நீராடுங்கள் ◆வீட்டையும் பூஜை அறையையும் பூக்களை கொண்டு அலங்கரியுங்கள் ◆கருப்பு உடைகளை தவிருங்கள் ◆விரதத்தை மேற்கொண்டு ராம நாமத்தை உச்சரியுங்கள் ◆ராமாயணத்தை படியுங்கள் ◆தானம் செய்யுங்கள் ◆மது, அசைவ உணவு, தகாத வார்த்தைகள் கூடாது ◆ராமரின் 14 ஆண்டுகால வனவாசத்தை நினைவுகூரும் விதமாக ஒரு மரத்தையாவது நடுங்கள்.
News March 26, 2026
நான் வேட்பாளர் இல்லை: தமிழிசை

தேர்தல் பிரசாரத்தை EPS நேற்று மயிலாப்பூரில் தொடங்கினார். அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு மயிலாப்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால், பிரசாரத்தில் EPS உடன் தமிழிசை கலந்து கொண்டார். இதனால், அவர்தான் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் என்று தகவல் பரவியது. ஆனால், அண்ணன் எடப்பாடியார் அழைத்ததன் பேரில் பிரசாரத்தில் கலந்து கொண்டதாகவும், வேட்பாளரை பாஜக விரைவில் அறிவிக்கும் என்றும் கூறினார். <<-se>>#TNElection2026<<>>
News March 26, 2026
Voter List-ல் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்

2026 தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. புதிதாக திருத்தம் செய்து வெளியிடப்பட்ட வாக்காளர்கள் பட்டியலில், விடுபட்ட நபர்கள் தங்களது பெயரை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. பெயர் இடம்பெறாதவர்கள், படிவம்-6 மூலம் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடமோ அல்லது இணையவழி சேவை மூலமோ விண்ணப்பிக்கலாம். SHARE IT <<-se>>#TNElection2026<<>>


