News August 5, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்!

*மேகதாது அணையை கட்டினால், அது இந்தியாவின் ஒற்றுமையை கேள்விக்குறியாக்கி விடும் – வைகோ *பட்டியலின மக்களுக்குள் உட்பிரிவுகளை ஏற்படுத்துவது சரியல்ல – மாயாவதி *2024-25ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் ₹6,784 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. *2024 TNPL தொடரின் இறுதிப் போட்டியில், திண்டுக்கல் அணி வென்றது. *வங்கதேசத்தில் இன்று ஏற்பட்ட வன்முறையில் 91 பேர் உயிரிழந்தனர்.
Similar News
News February 8, 2026
இனி சேப்பாக்கத்தில் விசில் போட முடியாது

NZ, AGF இடையேயான உலகக் கோப்பை போட்டி சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற நிலையில், மைதானத்திற்குள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. விசிலுக்கான தடை குறித்து ICC, BCCI தரப்பில் எந்த விதிமுறையும் இல்லை. ஆனால், உள்ளூர் கிரிக்கெட் வாரியம், போலீஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
News February 8, 2026
நகைக் கடன் தள்ளுபடி முடிவு.. வந்தாச்சு HAPPY NEWS

<<19007011>>கல்விக் கடன், மாற்றுத் திறனாளி கடன்<<>> போன்றவை தள்ளுபடி செய்யப்படும் என அதிமுக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இந்நிலையில், கடந்த தேர்தலைப்போல், இப்போதும் நகைக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்படுமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதற்கான நடவடிக்கையை திமுக அரசு தொடங்கிவிட்டதாம். கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் இருக்கும் நகைக் கடன் விவரம் சேகரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விரைவில் நல்ல செய்தி வெளியாகும்.
News February 8, 2026
EV கார்களுக்கு ₹3.80 லட்சம் வரை தள்ளுபடி!

டாடா மோட்டார்ஸ் தனது EV கார்களுக்கு ₹3.80 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்து வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக TATA Curvv மாடலுக்கு, வேரியண்ட்களை பொறுத்து ₹3.80 லட்சம் – ₹3.30 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல் Harrier (₹1.5 லட்சம்), Punch (₹1.6 லட்சம்), Tiago (₹1.5 லட்சம்), மற்றும் Nexon (₹1.2 லட்சம்) ஆகிய மாடல்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.


