News July 26, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்

➤ இளநிலை நீட் தேர்வுக்கான திருத்தப்பட்ட இறுதி முடிவுகள் வெளியானது.
➤ நெல்லை, கோவை மேயர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
➤ முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் திட்டம் இல்லை -மத்திய அரசு.
➤ முதல்வர் ஸ்டாலினுடன் ஐக்கிய அமீரக வர்த்தக அமைச்சர் அப்துல்லா பின் தெளக் சந்திப்பு
➤ தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு திட்டம் அமல்
Similar News
News December 1, 2025
சமந்தாவின் கணவர்.. யார் இந்த ராஜ் நிடிமொரு?

<<18437853>>சமந்தாவை<<>> கரம் பிடித்துள்ள ராஜ் நிடிமொரு திருப்பதியில் பிறந்தவர். இயக்குநர் DK உடன் இணைந்து பாலிவுட்டில் பல வெற்றி படங்களை ராஜ் இயக்கியுள்ளார். 2009-ல் ’99’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த ராஜ், தொடர்ந்து ‘Go Goa Gone’, ‘A gentleman’ போன்ற படங்களை இயக்கினார். சமந்தா நடித்த ‘The Family man’ சீரிஸ், ‘Citadel: Honey Bunny’ போன்ற வெப் தொடர்களும் அவர் இயக்கியதுதான்.
News December 1, 2025
நெல் ஈரப்பத அளவை TN அரசு உயர்த்த சொல்வது ஏன்?

மத்திய அரசின் தரக்குறியீட்டின்படி, நெல் கொள்முதலுக்கான ஈரப்பதம் 17% இருக்கவேண்டும். ஆனால், தற்போது பருவமழை காலம் என்பதால் குறுவை நெல்லின் ஈரப்பதம் 17% விட அதிமாக இருக்கும். நிர்ணயிக்கப்பட்ட அளவை விட நெல் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் அது தரமற்றதாக கருதப்படும். எனவே விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் ஈரப்பத அளவை 22% வரை உயர்த்த TN அரசு கோரிக்கை வைத்துவருகிறது.
News December 1, 2025
கம்பீர் & ரோஹித் – கோலிக்கு இடையே வெடித்த பிரச்னை!

பயிற்சியாளர் கம்பீருக்கும் நட்சத்திர ஆட்டக்காரர்கள் ரோஹித் – கோலி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளிவந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து இருவரும் ஓய்வு அறிவித்ததில் இருந்தே, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் & கம்பீருடன் இரு வீரர்களுக்கும் உரசல் உருவானதாக கூறப்படுகிறது. விரைவில் Ro-Ko-வின் எதிர்காலம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.


