News March 28, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்!

*படிக்காதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவதே எங்கள் இலக்கு – சீமான்
*தற்கொலைக்கு முயன்ற மதிமுக எம்.பி., கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
*வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க ₹7.50 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு திட்டம்
*கடந்த அக். -டிச.வரை 22 லட்சம் இந்திய வீடியோக்களை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளது
*ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி. சிந்து வெற்றி.
Similar News
News December 4, 2025
கலை ஆலமரத்தின் கிளை முறிந்தது: வைரமுத்து

AVM சரவணன் மறைந்ததற்கு கவிஞர் வைரமுத்து மனம் நொந்து இரங்கல் தெரிவித்துள்ளார். AVM-ல் அதிகமான பாடல்களை எழுத தனக்கு வாய்ப்பளித்தவர் சரவணன் என்றும், அவரை இழந்ததால் கலையுலகம் கையொடிந்து தவிக்கிறது எனவும் கூறியுள்ளார். இவரை தொடர்ந்து இரங்கல் தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன், அரை நூற்றாண்டுக்கு மேலாக தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு சரவணன் செய்த பணி நினைவில் நிற்கும் என புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
News December 4, 2025
விஜய்யை மறைமுகமாக கூட்டணிக்கு அழைத்த நயினார்

KAS தவெகவில் இணைந்ததே, அக்கட்சியை NDA கூட்டணியில் இணைப்பதற்குதான் என திமுக விமர்சிக்கிறது. இந்நிலையில், விஜய் உடன் கூட்டணி உண்டா என்ற கேள்விக்கு, TN-ல் திமுக ஆட்சி இருக்கக்கூடாது என நினைக்கும் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என கூறியிருக்கிறார் நயினார் நாகேந்திரன். இவரது பதிலால், விஜய்யுடன் கூட்டணி என்ற ஆப்ஷனை பாஜக இன்னும் வைத்திருப்பது உறுதியாகியுள்ளது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News December 4, 2025
புயல் சின்னம்: மழை வெளுத்து வாங்கும்

வட தமிழ்நாட்டில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது முற்றிலும் வலுவிழந்ததாக IMD தெரிவித்துள்ளது. கடந்த 27-ம் தேதி டிட்வா புயல் உருவாகி, இலங்கை, தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்த நிலையில் முற்றிலும் வலுவிழந்தது. இதனால், இனி மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும், சென்னை, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.


