News July 13, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்!

*ஆதிதிராவிடர்களின் நலன் காப்பதில் தமிழகம் முன்னணி மாநிலமாக விளங்குகிறது – ஸ்டாலின்
*தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீர் திறந்து விட முடியாது – சித்தராமையா
*நேபாள நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசந்தா தோல்வி.
*முதல் டெஸ்ட்: WI அணியை 114 ரன்கள் வித்தியாசத்தில் ENG அணி வென்றுள்ளது.
*WPI அடிப்படையிலான உணவு பொருள்களின் பணவீக்கம் 9.4% ஆக அதிகரித்துள்ளது.
Similar News
News November 22, 2025
BREAKING: திமுகவில் இருந்து நீக்கம்

திருவள்ளூர் தொகுதி திமுக MLA வி.ஜி.ராஜேந்திரனின் உதவியாளரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளருமான VS நேதாஜி திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சாலை அமைப்பது உள்ளிட்ட அரசு ஒப்பந்தப் பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், கட்சியிலிருந்து நீக்கி துரைமுருகன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
News November 22, 2025
பட்டாம்பூச்சி போல் சிறகு விரித்து பறக்கும் டெல்லி

டெல்லி என்றாலே காற்று மாசு பிரச்னைதான் பலருக்கு ஞாபகம் வரும். ஆனால் அதையும் தாண்டி நம் மனதில் நிற்கும் ஒரு போட்டோவை நாசா வெளியிட்டுள்ளது. விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட அது, பட்டாம்பூச்சி சிறகு விரித்து பறப்பது போல் காட்சியளிக்கிறது. பளிச்சென்று எரியும் மின்விளக்குகள், அதற்கு மத்தியில் ஓடும் யமுனை என டெல்லியின் அழகு காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
News November 22, 2025
மீண்டும் ரெக்க கட்டி பறக்க போகும் ‘அண்ணாமலை’

தமிழில் சூப்பர் ஹிட் அடித்த படங்களை ரீ ரிலீஸ் செய்வது இப்போது டிரெண்டாகி வருகிறது. மக்களும் பழைய படங்களை மீண்டும் திரையரங்கில் பார்த்து கொண்டாடுகின்றனர். அந்த வரிசையில் இப்போது ரஜினியின் அண்ணாமலை படம் மீண்டும் திரைக்கு வருகிறது. ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளையொட்டி , டிசம்பர் 12-ம் தேதி இப்படம் வெளியாகிறது. அசோக்கிற்கு எதிரான அண்ணாமலையின் போராட்டத்தை பார்க்க ரெடியா?


