News June 29, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்!

*இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் ஒலிம்பிக் சைக்கிள் ஓடுபாதை தளம் அமைக்கப்படும் என அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார். *பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஆன்லைன் மூலம் பெறும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. *அனைத்து வகை ரீசார்ஜ் கட்டணங்களையும் ஜூலை 3 முதல் உயர்த்துவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. *ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News September 19, 2025
காசா போருக்கு எதிரான தீர்மானத்தை ரத்து செய்த US

காசாவில் உடனடி போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கக் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 14 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஆனால், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி மீண்டும் அதை ரத்து செய்துள்ளது. இந்தத் தீர்மானம் ஹமாஸை போதுமான அளவு கண்டிக்கவில்லை என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
News September 19, 2025
திமுகவில் இணைந்த அதிமுக தலைவர்கள்!

அதிமுகவில் அதிருப்தியில் உள்ள தலைவர்களை திமுக அடுத்தடுத்து இழுத்து வருகிறது. Ex அமைச்சர் அன்வர் ராஜா, Ex MP மைத்ரேயன் வரிசையில், ஜெயலலிதாவுக்கு அரசியல் உரை ஆசிரியராக இருந்த மருது அழகுராஜும் திமுகவில் இணைந்துள்ளது அக்கட்சியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிமுகவிலிருந்து பலர் திமுகவில் இணைய உள்ளதாக மருது அழகுராஜ் குண்டு ஒன்றையும் வீசியுள்ளார். யார் யார் இணைய வாய்ப்புள்ளது?
News September 19, 2025
Robo Shankar-ன் நிலைமை வராமல் இருக்க இத கவனியுங்க

மஞ்சள் காமாலை பாதித்தவர்களுக்கு தோல், கண்கள் & உடலின் சில பகுதிகள் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதற்கு ‘பிலிருபின்’ தான் காரணம். பிலிருபின் என்பது சிவப்பு ரத்த அணுக்கள் உடையும்போது உற்பத்தியாகும் ஒரு மஞ்சள் நிறமி. 3 காரணங்களால் இது வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. ➤கல்லீரல் நோய் ➤பித்த நீர் அடைப்பு ➤ரத்த சிவப்பணுக்கள் அதிக அளவில் சிதைவது. இதில் ரோபோ சங்கரை பாதித்தது கல்லீரல் நோய்தான்.