News June 26, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்!

*மக்களவை சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெற உள்ளது. *வெப்ப அலை வீச்சு இனி பேரிடராக அறிவிக்கப்படும் என அமைச்சர் KKSSRR தெரிவித்துள்ளார். *T20 WC அரையிறுதிப் போட்டிக்கு ஆஃப்கன் அணி முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது. *2026 ஜனவரிக்குள் 75,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *ஆஸி., கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், ஒருநாள் போட்டிகளில் ஓய்வு அறிவித்தார்.
Similar News
News March 8, 2026
அஜித்குமார் போல் மற்றொரு மரணம்.. அடுத்த பரபரப்பு!

அஜித்குமார் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அதேபோல் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 6-ம் தேதி மதுபோதையில் இருவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதான ஆகாஷ், சிறைக்கு அழைத்து செல்லும் வழியில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக போலீசார் கூறுகின்றனர். ஆனால், ஆகாஷை போலீசார் அடித்து கொன்றதாக அவரது தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.
News March 8, 2026
விஜய் மீதான பயத்தால் திமுக கூட்டணியில் அதிக கட்சிகளா?

விஜய் மீது உள்ள பயத்தால், அதிக கட்சிகளை கூட்டணியில் திமுக சேர்த்ததாக கூறுவது அறியாமை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். விஜய் கட்சி துவங்கும் முன்பே உருவான மெகா கூட்டணி இது; இதில் ஒருசில கட்சிகள் மட்டுமே புதிதாக சேர்ந்துள்ளன என்றார். விஜய் ஆட்சியில் பங்கு என கூறியும் தவெகவுடன் யாரும் கூட்டணி வைக்கவில்லை; இதை மூடி மறைப்பதற்குதான் இப்படிப்பட்ட கருத்தை திட்டமிட்டு பரப்புகின்றனர் என விமர்சித்தார்.
News March 8, 2026
₹1 செலவில்லை.. இலவச மருத்துவ ஆலோசனை!

பல இடங்களில் மருந்துச் செலவை விட, டாக்டரின் Consultation Fees மிக அதிகமாக உள்ளது. இது ஏழை எளிய மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. இதனை தவிர்க்க, மத்திய அரசு இ-சஞ்சீவனி என்ற திட்டத்தை வழங்குகிறது. இணையதளம் மூலம் தொலைபேசி / வீடியோ கால் மூலம் நோய்கள் & சிகிச்சைகள் பற்றி டாக்டரிடம் ஆலோசனை பெறலாம். இதில் வழங்கப்படும் இ-பிரிஸ்கிரிப்ஷனை வைத்து மருந்துகளும் வாங்கலாம். இப்பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


